» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
எட்டயபுரத்தில் பாஜக தேர்தல் அறிக்கை வாகனம் : ராம சீனிவாசன் தொடங்கி வைத்தார்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 7:35:19 AM (IST)

எட்டயபுரத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாஜக-வின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கான கருத்துக்கேட்பு வாகனத்தை அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாஜக-வின் "மக்களுக்காக மக்களிடம் இருந்து" என்ற தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கான கருத்துக்கேட்பு வாகனத்தை அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னதாக, எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள மகாகவி பாரதியாரின் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முக்கியப் பங்கேற்பாளர்கள்: வடக்கு மாவட்ட துணைத் தலைவர் ஆத்திராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நீகழ்வில், மாவட்டத் தலைவர் சரவணகிருஷ்ணன், ஒன்றிய தலைவர் சரவண குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராம்கி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விவசாய அணி தலைவர் ஜெய கண்ணன், இளைஞர் அணி தலைவர் பொன்ராஜ் உட்பட மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இதில் கலந்து கொண்டனர். இந்த வாகனம் தொகுதி முழுவதும் சென்று பொதுமக்களின் கோரிக்கைகளை தேர்தல் அறிக்கைகாகச் சேகரிக்க உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







