» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

லோடு ஆட்டோவில் புகையிலைப் பொருள்கள் கடத்தல் : இருவர் கைது!

ஞாயிறு 8, பிப்ரவரி 2026 8:52:00 AM (IST)

ஆறுமுகநேரியில் லோடு ஆட்டோவில் புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

ஆறுமுகநேரி சோதனைச் சாவடியில் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் தலைமையிலான போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த லோடு ஆட்டோவை சோதனையிட்டனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட 15 கிராம் எடையுள்ள 861 பாக்கெட் புகையிலைப் பொருள்கள், 12 கிராம் எடையுள்ள 81 பாக்கெட் கூல் ­லிப் இருந்தது தெரிய வந்தது.

அவற்றை கடத்தி வந்தவர்கள் ஆறுமுகநேரி, பேயன்விளை, கிழக்குத் தெருவைச் சேர்ந்த பெரியசாமி மகன் சக்தி விஜயன் (44), கணேச புரத்தைச் சேர்ந்த வீரமணி மகன் நட்டார் (41) என்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 4.5 கிலோ புகையிலை, கூல் லிப் பொருள்கள், லோடு ஆட்டோ, ரூ. 20,000 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிந்து, திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் சக்தி விஜயன், கடந்த மாதம் 5ஆம் தேதி 100 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்தபோது தப்பியோடிய முக்கிய குற்றவாளி என்பதும், இவர் மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மினி லோடு லாரியில் புகையிலைப் பொருள்கள் கடத்தியது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

inbaFeb 10, 2026 - 08:07:17 AM | Posted IP 104.2*****

சூப்பரப்பு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory