» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் : பார் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்!

வியாழன் 11, டிசம்பர் 2025 8:54:06 PM (IST)



தூத்துக்குடியில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி பார் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். 

தூத்துக்குடி மாவட்டத்தில்  டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் திட்டம் கடந்த இரண்டாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. மது பாட்டில்களை விற்பனை செய்யும் போது டாஸ்மாக் ஊழியர்கள் பாட்டிலில் ஸ்டிக்கர் ஒட்டி கூடுதலாக பத்து ரூபாய்க்கு விற்பனை செய்வர். மதுவை பயன்படுத்துவோர் பயன்படுத்திய பிறகு காலி பாட்டிலை ஸ்டிக்கருடன் டாஸ்மாக் பார் நடத்துபவரிடம் கொடுத்து பத்து ரூபாய் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது விதிமுறை.

இந்த திட்டம் அமுல்படுத்திய நாளிலிருந்து மதுவை பயன்படுத்துவோருக்கும், டாஸ்மாக் பார் நடத்துபவர்களுக்கும் இடையே வாக்குவாதம், சண்டை, மண்டை உடைப்பு என்று தொடர்ந்து நடந்து வருகிறது.  பல இடங்களில் பிரச்சனை ஏற்பட்டவுடன் டாஸ்மாக் கடைகளை பூட்டி மது விற்பனையை நிறுத்தம் செய்யும் நிலைமையும் ஏற்பட்டது. 

மேலும் பாட்டிலில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கரை மட்டும் கொடுத்துவிட்டு பத்து ரூபாய் கேட்பதாகவும் பாட்டிலுடன் ஸ்டிக்கரையும் சேர்த்து ஒப்படைத்தால் மட்டுமே பத்து ரூபாய் கொடுக்க முடியும் என்பதில் பார்  ஊழியர்களுக்கும் மது பிரியர்களுக்கும் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வருவதால் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி இன்று தூத்துக்குடி நகர் பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை பார்களும் திறக்கப்படவில்லை. இது தொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education








Thoothukudi Business Directory