» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு எஸ்பி பாராட்டு!

வியாழன் 11, டிசம்பர் 2025 8:30:35 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 23 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலைய குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து சொத்துக்களை பறிமுதல் செய்தும், நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர உதவியாக இருந்தும், சைபர் குற்ற  வழக்குகளில் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டது உட்பட கடந்த மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர் உட்பட 23 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான்  இன்று (11.12.2025) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து நற்பணிசான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

கஞ்சா - புகையிலை பறிமுதல்!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு, வழக்கின் விசாரணை, நீதிமன்ற பணி உட்பட அனைத்து பணிகளிலும் கடந்த மாதத்தில் சிறப்பாக நடவடிக்கை மேற்கொண்டமைக்காக தூத்துக்குடி வடபாகம், திருச்செந்தூர் ஆகிய காவல் நிலையங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சிறந்த பணிகளின் அடிப்படையில் தேர்வு செய்தார்.

அதேபோன்று காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து சிறப்பாக செயல்பட்டதற்காக சிப்காட், புதுக்கோட்டை ஆகிய காவல் நிலையங்களும், அதிகமான வழக்குகளை E-filing முறையில் நீதிமன்றத்தில் கோப்புக்கு எடுக்க விரைந்து நடவடிக்கை மேற்கொண்டமைக்காக தூத்துக்குடி தென்பாகம், திருச்செந்தூர் ஆகிய காவல் நிலையங்களும் தூத்துக்குடி மாவட்டத்திற்குள் தேர்வு செய்யப்பட்டடு  மேற்படி 5 காவல் நிலையங்களின் சிறப்பான நடவடிக்கைகளுக்காக அதன் காவல் நிலைய ஆய்வாளர்களுக்கும்,

மேலும் கோவில்பட்டி உட்கோட்டத்தில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனை மற்றும் கடத்தலை கட்டுபடுத்தியும், அதிகளவில் பறிமுதல் செய்தும் சிறப்பாக நடவடிக்கை மேற்கொண்டமைக்காக கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  ஜெகநாதன் ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான்  மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital






Thoothukudi Business Directory