» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உயர் மின்னழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் சேதம் ‍: இழப்பீடு வழங்க மக்கள் கோரிக்கை!

வியாழன் 11, டிசம்பர் 2025 8:24:52 PM (IST)


விளாத்திகுளம் அருகே உயர் மின்னழுத்தத்தால் பல்வேறு வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான கந்தசாமிபுரம் மற்றும் சேர்வைகாரன்பட்டி ஆகிய இரண்டு கிராமங்களிலும் நேற்று இரவு ஏற்பட்ட உயர் மின் அழுத்தம் காரணமாக பல்வேறு வீடுகளில் உள்ள LED டிவிகள், குளிர்சாதன பொருட்கள், மின்விசிறி, மின்விளக்குகள், க்ரைண்டர்,குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன. 

கந்தசாமிபுரம் கிராமத்தை பொருத்தவரை அப்பகுதி மக்கள் முழுவதும் விவசாயம் மட்டுமே செய்து வரும் நிலையில், மின்னழுத்தம் காரணமாக பழுதான மின்சாதன பொருட்களை சரி செய்ய முடியாத சூழ்நிலையில் உள்ளதாக கூறுகின்றனர்.

மின் கட்டண தொகையை ஒரு நாள் தாமதமாக செலுத்தினாலும், அல்லது மின் கட்டணத் தொகையை செலுத்தாமல் இருந்தால் பீஸ் கேரியரை அதிரடியாக பிடுங்கி அபராத தொகை விதிக்கும் மின்வாரியத் துறையினர், மின்சாரத்துறையின் அலட்சியம் காரணமாக பழுதான மின்சாரப் பொருட்களுக்கு உடனடியாக நிவாரணத் தொகை வழங்க வேண்டும்,  இல்லையென்றால் நீதிமன்றத்தை நாட உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory