» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி பள்ளியில் பாரதியார் பிறந்த தின விழா
வியாழன் 11, டிசம்பர் 2025 8:18:15 PM (IST)

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 143வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்து பாரதியார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கணித பயிற்சி ஆசிரியை திவ்யா பாரதியாரின் வாழ்க்கை, விடுதலைப் போரில் அவரின் பங்களிப்புகள், பெண் விடுதலை மற்றும் கவிதை சிறப்புகள் குறித்து விளக்கி கூறினார்.
அதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு கவிதை, ஓவியம் மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெற்றன. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், பயிற்சி ஆசிரியைகள் உமா மகேஸ்வரி, விஜி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பயிற்சி ஆசிரியை இந்து இசக்கி நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










