» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
செவ்வாய் 9, டிசம்பர் 2025 9:37:40 PM (IST)

கோவில்பட்டியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். 2 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் குரு வெங்கட்ராஜ் மேற்பார்வையில் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) பிரேமா தலைமையிலான போலீசார் இன்று (09.12.2025) கோவில்பட்டி மதுவிலக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருநெல்வேலி to மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆவல்நத்தம் விலக்கு பகுதியில் ரோந்து மேற்கொண்டனர்.
அப் போது அங்கு சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் கோவில்பட்டி பாரதிநகரை சேர்ந்த மாடசாமி (எ) ராதாகிருஷ்ணன் மகன் திலீபன் (எ) மனோகர் (26) என்பதும் அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனடியாக போலீசார் திலீபன் (எ) மனோகரை கைது செய்து அவரிடமிருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிவஞானபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா
செவ்வாய் 3, மார்ச் 2026 10:21:30 AM (IST)

ஆழ்வார்திருநகரி கோயில் மாசித் திருவிழாவில் கருட சேவை : திரளான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 3, மார்ச் 2026 8:17:14 AM (IST)

தீப்பெட்டி குடோனில் தீ விபத்து: ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
செவ்வாய் 3, மார்ச் 2026 8:12:59 AM (IST)

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மார்ச் 23-ல் தீர்ப்பு: நீதிமன்றம் அறிவிப்பு
செவ்வாய் 3, மார்ச் 2026 8:07:02 AM (IST)

பூனை குறுக்கே வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர் உயிரிழப்பு!
செவ்வாய் 3, மார்ச் 2026 7:50:52 AM (IST)

பெண் கொடூர கொலை: மது குடிக்கப் பணம் தராத ஆத்திரத்தில் மகன் வெறிச்செயல்!
செவ்வாய் 3, மார்ச் 2026 7:44:34 AM (IST)










