» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சியில் 10ம் தேதி பகுதி சபா கூட்டம் : ஆணையர் ப்ரியங்கா தகவல்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:42:50 PM (IST)
தூத்துக்குடி மாநகராட்சியில் வருகிற 10ம் தேதி புதன்கிழமை பகுதி சபா கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசால் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளவாறு உள்ளாட்சி அமைப்புகளில் நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகத்தை வலுப்படுத்தவும் நகர்ப்புற உள்ளாட்சி செயல்பாடுகளில் பொதுமக்களின் பங்கேற்பு மற்றும் திட்டம், வளர்ச்சி பணிகள் செயல்படுத்தவும் மாநகராட்சிகளில் பகுதி சபா குழுக்கள் அமைக்க தெரிவிக்கப்பட்டதன் பேரில், தூத்துக்குடி மாநகராட்சியில் வார்டு ஒன்றுக்கு ஐந்து பகுதி சபா குழுக்கள் வீதம் மொத்தம் உள்ள 60 வார்டுகளுக்கும் 300 பகுதி சபா குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு காலாண்டுக்கான பகுதி சபா கூட்டமானது வருகின்ற 10.12.2025 புதன்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அந்தந்த வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற உள்ளது. மேற்படி கூட்டத்தில் மாண்புமிகு மேயர், துணை மேயர், மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பணியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே, அப்பகுதிவாழ் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிவஞானபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா
செவ்வாய் 3, மார்ச் 2026 10:21:30 AM (IST)

ஆழ்வார்திருநகரி கோயில் மாசித் திருவிழாவில் கருட சேவை : திரளான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 3, மார்ச் 2026 8:17:14 AM (IST)

தீப்பெட்டி குடோனில் தீ விபத்து: ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
செவ்வாய் 3, மார்ச் 2026 8:12:59 AM (IST)

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மார்ச் 23-ல் தீர்ப்பு: நீதிமன்றம் அறிவிப்பு
செவ்வாய் 3, மார்ச் 2026 8:07:02 AM (IST)

பூனை குறுக்கே வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர் உயிரிழப்பு!
செவ்வாய் 3, மார்ச் 2026 7:50:52 AM (IST)

பெண் கொடூர கொலை: மது குடிக்கப் பணம் தராத ஆத்திரத்தில் மகன் வெறிச்செயல்!
செவ்வாய் 3, மார்ச் 2026 7:44:34 AM (IST)










