» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி-மைசூர் இடையே கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 7:57:20 PM (IST)
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி-மைசூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
இதன்படி தூத்துக்குடி -மைசூர் சிறப்பு ரயில் (வண்டி எண். 06284) 24-12-2025 (புதன்கிழமை), 28-12-2025 (ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடியில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும். அதிகாலை 05.10 மணிக்கு பெங்களூர் சென்றடையும். காலை 07:45 மணிக்கு மைசூர் சென்றடையும்.
இந்த ரயில் தூத்துக்குடி மேலூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, ஓசூர், பெங்களூர் கண்டோன்மென்ட், பெங்களூர், கெங்கேரி, ராம் நகரம், சென்னப்பட்டினம், மாத்தூர், மாண்டியா ஆகிய நிறுத்தங்களில் நிற்கும்..
மைசூர்-தூத்துக்குடி சிறப்பு ரயில் (வண்டி எண். 06283) 23-12-2025 (செவ்வாய்க்கிழமை), 27-12-2025 (சனிக்கிழமை) மைசூர் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6:35 மணிக்கு புறப்படும். பெங்களூரில் இருந்து இரவு 9:25 மணிக்கு புறப்படும். காலை 10:19 மணிக்கு தூத்துக்குடி மேலூர் வந்தடையும். 11-00 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும்.
இந்த ரயில் மாண்டியா, மாத்தூர், சென்னப்பட்டினம், ராம நகரம், கெங்கேரி,
கே எஸ் ஆர் பெங்களூர்,பெங்களூர் கண்ட்ரோல்மென்ட், ஓசூர், தர்மபுரி, சேலம்,நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூர் ஆகிய நிறுத்தங்களில் நிற்கும். கிறிஸ்துமஸ் - புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கிய தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிவஞானபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா
செவ்வாய் 3, மார்ச் 2026 10:21:30 AM (IST)

ஆழ்வார்திருநகரி கோயில் மாசித் திருவிழாவில் கருட சேவை : திரளான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 3, மார்ச் 2026 8:17:14 AM (IST)

தீப்பெட்டி குடோனில் தீ விபத்து: ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
செவ்வாய் 3, மார்ச் 2026 8:12:59 AM (IST)

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மார்ச் 23-ல் தீர்ப்பு: நீதிமன்றம் அறிவிப்பு
செவ்வாய் 3, மார்ச் 2026 8:07:02 AM (IST)

பூனை குறுக்கே வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர் உயிரிழப்பு!
செவ்வாய் 3, மார்ச் 2026 7:50:52 AM (IST)

பெண் கொடூர கொலை: மது குடிக்கப் பணம் தராத ஆத்திரத்தில் மகன் வெறிச்செயல்!
செவ்வாய் 3, மார்ச் 2026 7:44:34 AM (IST)










