» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பக்கிள் ஓடையில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு
வியாழன் 4, செப்டம்பர் 2025 4:39:13 PM (IST)
தூத்துக்குடியில் பக்கிள் ஓடையில் கிடந்த பெண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி ஜெயராஜ் ரோடு, தனியார் மருத்துவமனை அருகே 3வது ரயில்வே கேட் பாலம் அருகே பக்கிள் ஓடையில் இன்று மதியம் சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடந்தது. இதுகுறித்து தகவலின் பேரில் மத்திய பாகம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, தீயணைப்பு வீரர்கள் உதவியுடன சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்தப் பெண் ரோட்டில் நடந்து சென்ற போது வெயிலின் தாக்கத்தால் மயங்கி மின்கம்பத்தில் சாய்ந்து நின்றபோது திடீரென ஓடைக்குள் தவறி விழுந்து இறந்து விட்டதாக கூறப்படுகிறது. அவர் யார், எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து மத்திய பாகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)










