» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்

வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)



தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இரட்டை ரயில் பாதையில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் கோவில்பட்டி மற்றும் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையங்களில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இரட்டை ரயில் பாதை சீரமைப்புப் பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளன. இதனால் வரும் டிசம்பர் 20, 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சென்னை மற்றும் மைசூர் ஆகிய இடங்களில் இருந்து தூத்துக்குடி வந்தடைய வேண்டிய மைசூர் எக்ஸ்பிரஸ் மற்றும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்படும். மறுமார்க்கமாக அதே எக்ஸ்பிரஸ் ரயில்கள் வாஞ்சிமணியாச்சி ரயில் நிலையத்திலிருந்தே புறப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இந்நிலையில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியைச் சார்ந்த பொதுமக்கள், சீரமைப்புப் பணிகள் நடைபெறும் காலகட்டத்தில் தங்களுக்கு கோவில்பட்டி மற்றும் வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து தூத்துக்குடி வந்து செல்வதற்கு பேருந்து வசதி செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அந்தக் கோரிக்கையை ஏற்று வரும் டிசம்பர் 20, 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சென்னை மற்றும் மைசூர் ஆகிய ஊர்களில் இருந்து கோவில்பட்டி வழியாக வாஞ்சி மணியாச்சிக்கு வந்தடையும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிக்கும் பயணிகள் தூத்துக்குடி வருவதற்கு வசதியாக கோவில்பட்டி மற்றும் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் குறிப்பிட்ட 3 நாட்களில் தங்களுக்கு ஏற்படும் சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு. அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளை தூத்துக்குடி வந்தடைவதற்குப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital




Thoothukudi Business Directory