» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம் : பயணிகள் அவதி

வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 9:37:49 PM (IST)

தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். 

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் இரவு 8:00 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு, சென்னை எழும்பூருக்குச் செல்லும். இந்த ரயில் இரவு 8 மணிக்கு முதல் நடைமேடையில் நிறுத்தப்படும். இன்று 8.25 மணி வரை நடைமேடைக்கு வரவில்லை. இதனால் பயணிகள் பரிதவித்தனர். இந்நிலையில் 8:30 மணிக்கு முதல் நடை மேடையில் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது. 

உடனடியாக பயணிகள் ஏறினர். 8:40 மணிக்கு புறப்படும் நேரத்தில் அனைத்து பெட்டியிலும் மின்சாரம் இல்லாததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் அதிகாரிகள் விரைந்து வந்து அனைத்து ரயில் பெட்டிகளிலும் சோதனை செய்து மின்சார இணைப்பை சரி செய்தனர் பின்னர் தாமதமாக இரவு 9.05 மணிக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டது.

முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் பழைய பெட்டிகள் இருப்பதால் அடிக்கடி பழுதுகள் ஏற்படுகிறது. மேலும் பராமரிப்பு பணிகள் சுத்தமாக இல்லை. தூத்துக்குடியில் பராமரிக்கும் இட வசதி இல்லை இதனால் சென்னையில் தான் பராமரிக்க வேண்டும் இந்த பெட்டிகளை மாற்றி புதிய பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று பயணிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

M BabuAug 19, 2025 - 07:18:16 AM | Posted IP 104.2*****

station la irukuravangaluku pottikala melavitanukum tutykum sanding adka theriyum nalla

ஓட்டு போட்ட முட்டாள்Aug 16, 2025 - 06:08:08 PM | Posted IP 172.7*****

extraa 2 ரயில் விட சொன்னா கண்ணுமுழி க்கு extraa விமானம் கேக்குது

அது மட்டுமல்லAug 16, 2025 - 06:06:24 PM | Posted IP 162.1*****

2 ஆம் வகுப்பு பெட்டியில் உள்ளே கரப்பான் பூச்சிகள் அதிகமாக இருக்கும்

shreeAug 16, 2025 - 11:10:47 AM | Posted IP 172.7*****

25 minutes late not as 40 mts

Uma.RAug 16, 2025 - 10:41:39 AM | Posted IP 162.1*****

Extra train one Chennai to tuticorin.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital



CSC Computer Education






Thoothukudi Business Directory