» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு வெடி வெடித்து 2 மாணவர்கள் காயம்: தூத்துக்குடியில் பரபரப்பு
செவ்வாய் 12, ஆகஸ்ட் 2025 5:44:06 PM (IST)

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் கொண்டு வந்த நாட்டு வெடி வெடித்ததில் 2 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பல்வேறு பாடப் பிரிவுகளில் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆறுமுகநேரி பாரதி நகரை சார்ந்த 17வயது மாணவன் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.
இன்று கல்லூரிக்கு வந்த அவர் நாட்டு வெடியை கல்லூரிக்கு வாங்கி கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது அவரது நண்பர்கள் அவர் கொண்டு வந்த நாட்டு பட்டாசு வெடி திரியை இழுத்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து பயங்கர சத்தத்துடன் அந்த பட்டாசு வெடித்து சிதறியது. இதில் அருகில் நின்று கொண்ருந்த 2 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தை தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பி மதன் பார்வையிட்டார். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் பட்டாசு வெடித்த அறை முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் அங்கு வெடித்து சிதறி கிடந்த பட்டாசுளை பரிசோதனை செய்தனர். அப்போது கோவில் திருவிழாக்களில் வெடிக்கப்படும் பட்டாசு என்று உறுதி செய்யப்பட்டது. இது சம்பந்தமாக தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)










