» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கோவில் பூசாரி வெட்டி கொலை : போலீஸ் விசாரணை
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 8:24:00 AM (IST)
தூத்துக்குடியில் கோவில் பூசாரி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இளஞ்சிறாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் ஏ.சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மூக்காண்டி மகன் ரவி (38). இவர் 3வது மைல் பகுதியில் உள்ள உள்ள பேச்சியம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி குழந்தைகளை பிரிந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தாளமுத்துநகர் அருகே சேதுபாதை ரோடு பகுதியில் பைக்கில் வந்து கொண்டிருந்த ரவியை மர்ம நபர்கள் வாளால் வெட்டி கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மங்களக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த விஜயா என்ற பெண் கணவரை பிரிந்து, கடந்த 5 வருடங்களாக ரவியுடன் சேர்ந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்ணின் 17 வயது மகன் ரவி மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், ரவியை 17 வயது சிறுவன் உட்பட 2பேர் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் அருளப்பன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி 17 வயதுடைய இளஞ்சிறாரை கையகப்படுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவான மற்றொருவரை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)










