» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கப்பல் கட்டுமான தளம்: மத்திய அரசு திட்டம்

செவ்வாய் 29, ஜூலை 2025 8:34:14 AM (IST)

தூத்துக்குடிக்கு மற்றொரு மகுடமாக 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கப்பல் கட்டுமான தளம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பிரதமர் மோடி விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை கடந்த 3 தினங்களுக்கு முன்பு திறந்து வைத்தார். அதன் மூலம் இனி தூத்துக்குடியில் பெரிய ரக விமானம் வந்து செல்லும். அதோடு கூடுதல் பயணிகளை அங்கு கையாள முடியும். இந்நிலையில் தற்போது தூத்துக்குடி துறைமுகத்தை மேம்படுத்தும் ஒரு மெகா திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. 

தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், ஒடிசா, குஜராத், மராட்டியம் ஆகிய 5 மாநிலங்களில் உள்ள துறைமுகங்களில் 15 ஆயிரம் ஏக்கரில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கப்பல் கட்டுமான தொகுப்புகள் செயல்படுத்தப்பட உள்ளன. அதில் தமிழகத்தில் தூத்துக்குடி துறைமுகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக தூத்துக்குடி துறைமுகம் அருகே 1,800 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் கூடுதலாக 1,200 ஏக்கர் இடம் அதில் இணைக்கப்படும். மொத்தம் 3 ஆயிரம் ஏக்கரில் இந்த கப்பல் கட்டுமான தளம் அமைக்கப்படும்.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: தூத்துக்குடியை முக்கிய கப்பல் கட்டும் மையமாக உருவாக்க அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேலும் தூத்துக்குடி பசுமை எரிபொருள் தொழில்துறைக்கான முக்கிய மையமாகவும் உருவாக்கப்படுகிறது. இங்கு உருவாக்கப்படும் கப்பல்கள், பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட பசுமை எரிபொருள்கள் பயன்படும் வகையில் தயாரிக்கப்படும்.  இது தூத்துக்குடியின் மற்றொரு மணி மகுடமாக இருக்கும். 

ஏற்கனவே, 5 பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திட்டங்கள் (40 லட்சம் டன் ஆண்டுக்கு) தூத்துக்குடியில் ஒப்புதல் பெற்றுள்ளன. இதற்காக மட்டும் ரூ.2 லட்சம் கோடி முதலீடுகள் திட்டமிடப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் உருவாகும் பசுமை ஹைட்ரஜன் தொகுப்பு உலகளவில் பாராட்டைப் பெற்றுள்ளது. உலக பொருளாதார மன்றம் இதனை "பசுமை ஹைட்ரஜன் தொகுப்பு" என அடையாளம் காட்டியுள்ளது. இங்கு ஹைட்ரஜன் மற்றும் பசுமை அமோனியா போக்குவரத்துக்கான பைப்லைன் வழித்தடமும் உருவாக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

SANGI 2.0Jul 29, 2025 - 12:44:45 PM | Posted IP 172.7*****

வாவ் இந்த வாடை கூட சூப்பரா இருக்கு

Issac JebaJul 29, 2025 - 08:48:32 AM | Posted IP 162.1*****

அருமை .. சாத்தியமான தகவல் விரைவில் எதிர்பார்ப்போம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory