» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் : ஆட்சியர் ஆலோசனை

திங்கள் 28, ஜூலை 2025 9:04:44 PM (IST)



தூத்துக்குடியில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் குழுக் கூட்டம் நடைபெற்றது

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று 2025 - 2026 ஆம் ஆண்டு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது தொடர்பாக மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியர் தெரிவித்ததாவது: முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025-26ஆம் ஆண்டுக்கான, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொது மக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளர்கள் என ஐந்து பிரிவுகளில் ஆண் பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில், 25 வகையான விளையாட்டுகளும், மண்டல அளவில் 7 வகையான விளையாட்டுகளும், மாநில அளவில் மொத்தமாக 37 வகையான விளையாட்டுகளும் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. 

போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் https:cmtrophy.sdat.in / www.sdat.tn.gov.in வாயிலாக வீரர் / வீராங்கனைகளின் குழு மற்றும் தனி நபர்களின் அனைத்து விவரங்களை பதிவு செய்திட வேண்டும். பதிவு செய்த வீரர் / வீராங்கனைகள் மட்டுமே கலந்து கொள்ள இயலும். இணையதளத்தில் 17.07.2025 முதல் 16.08.2025 பிற்பகல் 6.00 மணி வரை மட்டுமே பதிவு செய்திடலாம்.
 
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் 22.08.2025 முதல் 12.09.2025 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கு https:cmtrophy.sdat.in / www.sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை போட்டிகளில் கலந்து கொள்ளும் போது கொண்டு வருதல் வேண்டும்.

மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட உள்ளது. 

மாவட்ட மற்றும் மண்டல அளவிலான தனி நபர் போட்டிகள் / குழு போட்டிகளில் வெற்றி பெறும் வீரர் / வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக தலா ரூ.3000, இரண்டாம் பரிசாக தலா ரூ. 2,000, மூன்றாம் பரிசாக தலா ரூ.1000 வழங்கப்படும். இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும். 

தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணாக்கர்களுக்கும், 17 வயது முதல் 25 வயது வரை கல்லூரி மாணாக்கர்களுக்கும், 15 வயது முதல் 35 வயது வரை பொதுப் பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்திட கடைசி நாள். 16.08.2025 பிற்பகல் 6.00 மணி வரை. 

எனவே விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைவரும் தவறாமல் https://sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. தாங்களாகவோ, தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டு அரங்கம், ஜார்ஜ் ரோடு, தூத்துக்குடி – 628 001. தொலைபேசி எண் - 0461-2321149 / 7401703508 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார். 

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம், மாவட்ட விளையாட்டு அலுவலர் சு.அன்தோனி அதிர்ஷ்டராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education




Arputham Hospital



Thoothukudi Business Directory