» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

செந்தூர் எக்ஸ்பிரசில் 24 பெட்டிகள் இணைக்கப்படும் : ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங்

ஞாயிறு 27, ஜூலை 2025 11:10:06 AM (IST)



திருச்செந்தூர் - சென்னை அதிவிரைவு ரயிலில் 24 பெட்டிகள் இணைக்கப்படும் என்று தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.

திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 17.5 கோடியில் காத்திருக்கும் அறை, மாற்றுத்திறனாளி பயணிகள் காத்திருக்கும்- தங்கும் அறைகள், மின்தூக்கி, இருசக்கர, நான்கு சக்கர வாகன நிறுத்தம், நவீன சுகாரதார வளாகம், வாட்டர் கூலர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன்.

இப்ப பணிகளை நேற்று ஆய்வு செய்த ஆர்.என்.சிங், திட்டப் பணிகள் குறத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டப் பணிகளை ஆய்வு செய்தோம். அப்பணிகள் 60 சதவீதத்திற்கு மேலாக நிறைவு பெற்றுள்ளன. அதில் குளிர்சாதன காத்திருப்போர் அறைகளில் சில மாற்றங்கள் செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

திட்டப் பணிகள் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் நிறைவுற்று பயன்பாட்டுக்கு வரும். திருச்செந்தூர்- திருநெல்வேலி வரையிலான நிலையங்களில் நடைபெற்று வரும் நடைபாதை விரிவாக்க பணிகள் நிறைவுற்றதும் செந்தூர் அதிவிரைவு ரயிலில் (திருச்செந்தூர்- சென்னை) 24 பெட்டிகள் இணைக்கப்படும். திருச்செந்தூர்- பாலக்காடு விரைவு ரயிலிலும் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும். 

வந்தே பாரத் ரயிலை திருச்செந்தூர் வரை இயக்குவதற்கான திட்டமோ, திருச்செந்தூர்- தூத்துக்குடிக்கு புதிய ரயில் வழித்தடம் அமைப்பதற்கான திட்டமோ தற்போது இல்லை. அதேவேளையில், திருச்செந்தூர்-சென்னைக்கு நேரடி ரயில் இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார். ஆய்வின்போது, மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீ வத்ஸவா, கோட்ட மூத்த வணிக மேலாளர் கணேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

JohnJul 28, 2025 - 08:53:18 PM | Posted IP 104.2*****

தூத்துக்குடி திருச்செந்தூர் திட்டம் தற்போது இல்லை என்று மாத சம்பளம் வாங்கும் இந்த அதிகாரி கூறுகிறார் இந்த அலுவலகம் தான் அருப்புக்கோட்டை வழி மதுரை திட்டம் கைவிடப் பட்டதாக அறிவித்தது. பொதுமக்களின் தொடர் கோரிக்கைகள், தேவைப்பட்டால் போராட்டங்களால் இந்த திட்டத்தை வென்றேடுப்போம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital

CSC Computer Education





Thoothukudi Business Directory