» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குலசை தசரா திருவிழா: பக்தர்களின் விரதம் ஜூலை 25ம் தேதி தொடக்கம்!
திங்கள் 14, ஜூலை 2025 11:06:33 AM (IST)
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் 101 நாள் விரதம் வருகிற 25ஆம் தேதி தொடங்குகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெறும். திருவிழாவை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வர். நடப்பாண்டில் தசரா பெரும்திருவிழா வருகிற செப்.23ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தசரா திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து காளி, அம்மன், சிவன், கிருஷ்ணா், முருகன், விநாயகர் போன்ற சாமி வேடங்கள் மற்றும் குறவன், குறத்தி, போலீஸ், குரங்கு, கரடி, சிங்கம், புலி போன்ற பல்வேறு வேடங்கள் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். காளி வேடம் அணிபவர்கள் 41 நாள்களுக்கு மேலாக விரதம் இருக்க தொடங்குவார்கள். பெரும்பாலும் மற்ற வேடம் அணிபவர்கள் கொடியேறும் நாள் அன்று மாலை அணிந்து 11 நாள் விரதம் இருப்பர்.
இந்த நிலையில், குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவிற்கு 101 நாள் விரதம் வருகிற 25ஆம் தேதி தொடங்குகிறது. மேலும், 51 நாள் விரதம் 14.08.2025 (வியாழக்கிழமை), 48 நாள் விரதம் 17.08.2025 (ஞாயிற்றுக்கிழமை), 41 நாள் விரதம் 24.08.2025 (ஞாயிற்றுக்கிழமை), 31 நாள் விரதம் 03.09.2025 (புதன்கிழமை), 21 நாள் விரதம் 13.09.2025(சனிக்கிழமை), 11 நாள் விரதம் 23.09.2025(செவ்வாய்க்கிழமை) தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பட்டினமருதூரில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் கள ஆய்வு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:30:06 PM (IST)

பிரதமர் மோடி பதவி விலக கோரி காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:09:24 PM (IST)

பைக் மீது கார் மோதியதில் எலெக்ட்ரிசியன் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:39:17 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது - மேலும் மூவருக்கு வலைவீச்சு!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:26:04 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)










