» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.120 இலட்சம் செலவில் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறப்பு விழா

வியாழன் 3, ஜூலை 2025 8:00:05 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.120 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (3.7.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, அடையாறு, சாஸ்திரி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 52 கோடி ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் 60 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஊரக மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை மக்கள் பயன்பாட்டிற்காக காணொளிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பண்டகசாலையில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், குத்துவிளக்கேற்றி சிறப்பித்தார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் 7.5.2022 அன்று சட்டப்பேரவை விதி எண் 110 கீழ், தமிழ்நாடு மக்களின் சுகாதாரத் தேவைகளை மென்மேலும் மேம்படுத்திடும் விதத்தில் தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் இருப்பதைப் போல, நகர்ப்புறங்களில் மக்கள் அரசுப் பொது மருத்துவமனையை நோக்கி வரும்போது மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாகி வருகிறது. இந்நிலையை மாற்றி, ஒருங்கிணைந்த, தரமான மருத்துவ சேவைகளை மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே வழங்கிடும் நோக்கில், பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 21 மாநகராட்சிகள் மற்றும் 63 நகராட்சிப் பகுதிகளில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் 177 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி முதல்கட்டமாக, பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் 125 கோடி ரூபாய் செலவில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தலா 25 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு 6.6.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு, சிறப்பான முறையில் இயங்கி வருகின்றன. அதன் இரண்டாம் கட்டமாக, 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தலா 25 இலட்சம் ரூபாய் செலவிலும், ரூ.60 கோடி செலவில் ஊரக மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதியதாக அமைக்கப்பட்டு இன்றையதினம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டன.

மேலும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்களின் மூலம் தரமான 12 அத்தியாவசிய சுகாதார சேவைகளான மகப்பேறு நல சேவைகள், பச்சிளம் குழந்தை மற்றும் குழந்தை நல சேவைகள், வளர் இளம் பருவத்தினருக்கான சேவைகள், குடும்ப கட்டுப்பாடு சேவைகள், தொற்று நோய்களுக்கான சேவைகள், தொற்றா நோய்களுக்கான சேவைகள், கண், காது, மூக்கு, பல், வாய் மற்றும் தொண்டை நோய்களுக்கான சேவைகள், முதியோர் மற்றும் நோய் ஆதரவு நல சேவைகள், அவசர மருத்துவ சிகிச்சை சேவைகள், மனநல சேவைகள் மற்றும் யோகா போன்ற பல்வேறு நலவாழ்வு சேவைகள் நகர்ப்புற மக்கள், குறிப்பாக குடிசைவாழ் மற்றும் நலிந்த மக்களுக்கு தரமான முறையில் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், இப்புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் (PHC) புறநோயாளிகள், உள்நோயாளிகள் சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சை சேவைகள், மாதவிடாய் முதல் பேறடைதல் காலம் வரை, குழந்தை பிறப்புக்கு பிறகு பராமரிப்பு, குழந்தை ஆரோக்கியம் மற்றும் தடுப்பூசி திட்டமிடல் சேவைகள் தேசிய சுகாதார திட்டங்கள் செயல்படுத்துதல் (NTEP, NLEP, NVBDCP, NPCDCS, NACP) மற்றும் பிற ஆய்வுக்கூட சேவைகள், சுகாதார மேம்பாடு மற்றும் நோய்த் தடுப்பு மற்றும் இ-சஞ்சீவினி இணைய முகப்பின் மூலம் தேவைப்படும் நோயாளிகளுக்கு காணொலி மூலம் மருத்துவரின் ஆலோனை அல்லது சிகிச்சை குறித்த வழிகாட்டலை பெறும் சேவைக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்தில் தலா ரூ.25 இலட்சம் செலவில் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அத்திமரப்பட்டி, கால்டுவெல் காலனி, சில்வர்புரம் மற்றும் பண்டாரம்பட்டி ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையங்களையும், கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட ஊரணித் தெரு, சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையங்களும், காயல்பட்டினம் நகராட்சிகுட்பட்ட பண்டகசாலை பகுதியில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையமும், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், சிவஞானபுரம் ஊராட்சியில் ரூ.120 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை காணொளிக் காட்சி வாயிலாகத் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்ததைத் தொடர்ந்து, காயல்பட்டினம் நகராட்சி, பண்டகசாலை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.25 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், குத்துவிளக்கேற்றி சிறப்பித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து, 4 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலர் யாழினி, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் முத்து முஹம்மது, வட்டார மருத்துவ அலுவலர் ஹமீது ஹில்மி, காயல்பட்டினம் நகராட்சி மருத்துவ அலுவலர் /பாத்திமா /பர்வீன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory