» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதி ஒருவர் பலி
வெள்ளி 27, ஜூன் 2025 10:30:45 AM (IST)
தூத்துக்குடியில் சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதி படுகாயம் அடைந்த ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி கோரம்பள்ளம் காலங்கரை பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி மகன் தெய்வநாயகம் (55), இவர் கிணற்றுக்கு உறை இறக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று தூத்துக்குடி டேவிஸ்புரம் ரோட்டில் நடந்து சென்றபோது எதிரே வந்த ஒரு பைக் இவர் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் இன்ஸ்பெக்டர் அருளப்பன் வழக்குப் பதிந்து, பைக்கை ஓட்டி வந்த எம்ஜிஆர் நகரை சேர்ந்த முகமது மகன் அபுதீன் என்பவரை பிடித்து விசாரித்து வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சுதேசி திருவிழா டிச. 26இல் தொடக்கம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 7:32:18 AM (IST)

திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 7:28:04 AM (IST)

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)










