» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருமணமான 2 மாதங்களில் வாலிபர் தற்கொலை..!
புதன் 25, ஜூன் 2025 8:33:57 AM (IST)
கோவில்பட்டியில் திருமணமான 2 மாதங்களில் புது மாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வ.உ.சி. நகர் 5-வது தெருவை சேர்ந்த சண்முகநாதன் மகன் கண்ணன் (28). இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கண்ணன் திருமணத்திற்கு பின்பு வேலைக்குச் செல்லாமல் இருந்தாராம், இதனால் தம்பதியிடையே தகராறு இருந்து வந்ததாம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் மேற்கு போலீசார் சம்பவ வீட்டுக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சுதேசி திருவிழா டிச. 26இல் தொடக்கம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 7:32:18 AM (IST)

திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 7:28:04 AM (IST)

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)










