» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
த.வெ.க., தலைவர் விஜய் பிறந்த நாள் விழா: மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கல்
திங்கள் 23, ஜூன் 2025 8:07:48 AM (IST)

சிங்கிலிபட்டி, கல்குமியில் த.வெ.க., தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ள்ளி மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிங்கிலிபட்டி, கல் குமியில் த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அக்கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்களில் முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது.
மேலும், பொதுமக்கள் மற்றும் சிறுவர் சிறுமியர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி த.வெ.க பொறுப்பாளர் பிரவீன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். மேலும் இந்நிகழ்ச்சியின் போது கிராமத்தில் உள்ள குழந்தைகளுடன் சேர்ந்து கட்சியினர் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிறந்தநாளை கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் ஒன்றிய நிர்வாகிகள் அரவிந்த், ஆனந்த், இசக்கி, விஸ்வா, பிரபாகர், பொருளாளர் ராஜகுமார், கல்குமி கிளைச் செயலாளர் சேகர், சிங்கிலிபட்டி கிளைச் செயலாளர் விஜய், மகளிர் அணி துணைச் செயலாளர் மது, இணைச் செயலாளர் தேவி உட்பட சிங்கிலிபட்டி மற்றும் கல்குமியைச் சேர்ந்த ஏராளமான தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சுதேசி திருவிழா டிச. 26இல் தொடக்கம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 7:32:18 AM (IST)

திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 7:28:04 AM (IST)

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)










