» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 2 இடங்களில் புதிதாக காய்கனி மார்க்கெட் : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!

புதன் 18, ஜூன் 2025 12:19:49 PM (IST)



தூத்துக்குடியில் 2 இடங்களில் புதிதாக காய்கனி மார்க்கெட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். 

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் ஆணையர் மதுபாலன் தலைமையில் நடந்தது. துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலை வைத்தார். முகாமில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது "தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களிலும் கடந்த 22 ஆம் ஆண்டு முதல் வாரந்தோறும் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கிழக்கு மண்டலத்தில் இன்று 14வது முகாம் நடைபெறுகிறது. இதுவரை 2500 மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக தீர்வுகள் காணப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் உள்ள 60 வார்டுகளிலும் பொதுப்பிரச்சினை சுகாதாரம் வசதிகள் முழுமையாக தீர்க்கப்பட்டு வருகிறது. பிரதான சாலைகள் அனைத்தும் புதிதாக போடப்பட்டு உள்ளது. குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பகுதிகளில் புதிய ரோடுகள் போடுவதற்காக திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி தெப்பக்குளத்தை சீரமைத்து அதை சுற்றி பூங்கா அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. தூத்துக்குடியில் பொதுமக்கள் வசதிக்காக சால்ட் காலனி மற்றும் ஸ்டெம் பார்க் அருகே அம்பேத்கர் நகரில் புதிதாக இரண்டு காய்கறி மார்க்கெட் உருவாக்கப்பட உள்ளது. 

தற்போது கேரிபேக் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பக்கிள் ஓடையில் தண்ணீர் செல்ல முடியாத வகையில் கேரிபேக் மற்றும் குப்பைகள் போடப்பட்டு வருகிறது. இதை முழுமையாக தடுக்க கவுன்சிலர்கள் முழுமூச்சாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு மேயர் பேசினார். முகாமில் மனு அளித்த 5பேருக்கு உடனடியாக மேயர் சான்றிதழ்களை வழங்கினார். 

முகாமில் உதவி ஆணையர் வெங்கட்ராமன், மாநகர துணை பொறியாளர் சரவணன், நகர்நல அலுவலர் ரங்கநாதன், துணை ஆணையர் சரவணகுமார், உதவி செயற்பொறியாளர் இர்வின்குமார், மாநகராட்சி கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், ரெஸ்கிலில், தனலட்சுமி, ஜான்சி ராணி, எடின்டா, மும்தாஜ், ராமு அம்மாள், மகேஸ்வரி, மரிய கீதா, சரண்யா, பேபி ஏஞ்சலின், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரை மணி, மேயரின் நேர்முக உதவியாளர்கள் ரமேஷ், பிரபாகரன், ஜெஸ்பர் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

Ramalingam SadasivanNov 5, 2025 - 11:23:32 AM | Posted IP 104.2*****

Water tax is collected at random No proper measurement of water consumed The rates fixed by computer operator is permanent Will the Mayor reply how the water consumed is measured and billed?????

திருமதி பி. ஜெஸிJun 20, 2025 - 04:04:42 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடி மாநகராட்சி பணிகளை சிறப்பாக செய்கின்றமேயர் ஜெகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

DevarajanJun 19, 2025 - 11:37:56 PM | Posted IP 104.2*****

I request our beloved Mayor to implement the mandatory system of wearing helmet while riding bike in our Thoothukudi city.

பாலுJun 19, 2025 - 09:25:09 PM | Posted IP 172.7*****

புதிய பேருந்து நிலையத்திலிருந்து மட்டகடைவரை மினிபஸ்இல்லைஇதைமாவட்டநிற்வாகத்திற்குதெரியபடுத்துகிறேன்தாழ்மையுடன்

சண்முகம்Jun 19, 2025 - 03:01:59 PM | Posted IP 172.7*****

நகராட்சி , பேரூராட்சியில் ஏன் உழவர்சந்தை , காய்கனி மார்க்கெட் திறக்கவில்லை.

P. கண்ணன்Jun 18, 2025 - 07:23:32 PM | Posted IP 162.1*****

மாநகச்சியில்யே கேடுகெட்ட மாநகச்சியக தமிழகத்தில் முதன்மைக இருப்பது தூத்துக்குடி அடிச்சிக்க முடியாது காரணமே ஆளும் ஆளுமை காரணம் புதுபஸ் நிலையத்தை பாருங்க குப்பைகிடங்கை விட கேவலமா இருக்கும் போக்குவரத்துநெரிசலில் மக்கள் தின்டாடுவதை காணவேன்டுமா 1&2ரயில்வே கேட்டுக்கு வாருங்கள் மாநகச்சியின் அவலம் அம்பலமாகும் தரம் கெட்டுபோன போக்குவரத்துக்கு காய்கறி மார்க்கெட் வந்து பாருங்க மாநகச்சியின் லட்சணம் புரியிம் மக்கள் நடமாடும் ரோட்டோற நடமேடையபாருங்க ஆக்கிரமித்தல் வியாபாரிகளை அகற்றத காரணம் தெரியிம் இதுதான் தூத்துக்குடி வரலாறு

WoW!Jun 18, 2025 - 02:08:20 PM | Posted IP 162.1*****

மார்கெட் வேண்டும்! தெற்கு மண்டலத்திற்கும் FCI godown கீழ்புறம் உள்ள இடத்தில் ஒரு மார்கெட் அமைத்து தாருங்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory