» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை
புதன் 18, ஜூன் 2025 8:05:08 AM (IST)
ஆத்தூர் அருகே இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகே ஆவரையூரைச்சேர்ந்த தேவேந்திரன் மகன் கவியரசன் (33). தொழிலாளியான இவருக்கும், குரும்பூர் அருகே அம்மன்புரத்தைச் சேர்ந்த பேச்சிமுத்து மகள் சுகன்யாவுக்கும் (27) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
கவியரசன் வேலைக்குச் செல்லாமல் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்ததாகவும், இதனால் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம், சுகன்யா வீட்டில் யாருமில்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். சம்பவம் தொடர்பாக பேச்சிமுத்து நேற்று அளித்த புகாரின் பேரில், ஆத்தூர் போலீசார் வழக்குப் பதிந்து, சுகன்யா தற்கொலை செய்து கொண்டாரா, அவரது இறப்பில் மர்மம் உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாய் குறுக்கே வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து விபத்து : 10 மாணவிகள் காயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:17:22 AM (IST)

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சுதேசி திருவிழா டிச. 26இல் தொடக்கம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 7:32:18 AM (IST)

திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 7:28:04 AM (IST)










