» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாலை விபத்தில் கூட்டுறவு வங்கி விற்பனையாளர் சாவு
செவ்வாய் 17, ஜூன் 2025 8:43:52 AM (IST)
கோவில்பட்டியில் சாலையில் நடந்து சென்றபோது வாகனம் மோதி பலத்த காயமடைந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி விற்பனையாளர் உயிரிழந்தார்.
திருவேங்கடம் வட்டம், நடுவப்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த ராமர் மகன் சந்திரன் (59). தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விற்பனையாளராக வேலை செய்து வந்த இவர் நேற்று முன்தினம் கோவில்பட்டிக்கு வந்திருந்தாராம்.
இந்நிலையில் இரவு கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றபோது, அவர் மீது அடையாளம் தெரியாத வாகன மோதியதில் பலத்த காயமடைந்த சந்திரன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் தீவிரசிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாய் குறுக்கே வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து விபத்து : 10 மாணவிகள் காயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:17:22 AM (IST)

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சுதேசி திருவிழா டிச. 26இல் தொடக்கம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 7:32:18 AM (IST)

திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 7:28:04 AM (IST)










