» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விவசாயியை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் : இளைஞர் கைது
செவ்வாய் 17, ஜூன் 2025 8:39:32 AM (IST)
கோவில்பட்டி அருகே முன்விரோதம் காரணமாக விவசாயியை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே வடக்குப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் ஆதிமூலம் மகன் விவசாயி ரவிக்குமார் (27). இவருக்கும் அதே பகுதி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (67), அவரது மகன் ராஜசேகர் (32) ஆகியோருக்கு இடையே இட பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாம்.
இந்நிலையில் இம்மாதம் 11ஆம் தேதி ரவிக்குமார் தனது விவசாய நிலத்தில் செடிக்கு மருந்து அடித்துக் கொண்டு இருந்தாராம். அப்போது அதன் அருகே பாலகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு சொந்தமான தோட்டத்துக்கு பாலகிருஷ்ணனும், அவரது மகன் ராஜசேகரும் சென்றபோது, ரவிக்குமார் தனியாக நிற்பதை பார்த்து அங்கு சென்ற இருவரும் இரும்புக் கம்பியால் ரவிக்குமாரை தாக்கினார்களாம்.
அப்போது ரவிக்குமாரின் சப்தம் கேட்டு, உறவினர்கள் தோட்டத்துக்கு வந்ததை பார்த்ததும், தந்தை, மகன் இருவரும் தப்பியோடி விட்டனர். காயமடைந்த ரவிக்குமார் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து ராஜசேகரை நேற்று கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சுதேசி திருவிழா டிச. 26இல் தொடக்கம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 7:32:18 AM (IST)

திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 7:28:04 AM (IST)

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)










