» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் - பள்ளி வாகனம் மோதல் : தலைமை ஆசிரியர் பலி
திங்கள் 16, ஜூன் 2025 9:43:19 PM (IST)
கயத்தாறு அருகே பள்ளி வாகனம் மீது பைக் மோதிய விபத்தில் தலைமை ஆசிரியர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, முத்து நகரைச் சேர்ந்தவர் அருள் அய்யா மகன் ஐசக் தேவராஜ் (56), இவருக்கு ஜான்சி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் நெல்லை மாவட்டம் கங்கை கொண்டான் அருகே கே.கைலாசபுரத்தில் உள்ள டி.டி.டி.ஏ. நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இன்று காலையில் கோவில்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வில்லிசேரி அருகே வரும்போது எதிரே வந்த தனியார் பள்ளி வாகனம் மீது பைக் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி இன்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கயத்தாறு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுதா தேவி வழக்கு பதிவு செய்து, பள்ளி வாகனத்தை ஓட்டி வந்த கோவில்பட்டி வேலாயுதபுரம் பகுதியை சேர்ந்த சீனியப்பன் மகன் மாரியப்பன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சுதேசி திருவிழா டிச. 26இல் தொடக்கம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 7:32:18 AM (IST)

திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 7:28:04 AM (IST)

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)










