» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மக்கள் குறை களையும் கூட்டத்தில் ரூ.40.39 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 16, ஜூன் 2025 4:07:22 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் 240 பயனாளிகளுக்கு ரூ.40.39 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று (16.06.2025) நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 710 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்கள். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 22 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 10 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ.89000/- மதிப்பலான மடக்கு சக்கர நாற்காலிகளையும், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டத்தின் கீழ் சமூக தரவு கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக 210 களப்பணியாளர்களுக்கு ரூ.31.50 இலட்சம் மதிப்பிலான கையடக்க கணினிகளையும், மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில், ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்கள் ‘முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்கி பயன்பெறும் வகையில் 10 நாட்கள் திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி (EDII Training) பெற்ற 11 முன்னாள் படைவீரர்களுக்கு பயிற்சி சான்றிதழ்களையும்,
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு மீட்க இயலாத நிலையிலுள்ள தருவைகுளத்தைச் சேர்ந்த விசைப்படகு உரிமையாளருக்கு முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து ரூ.8 இலட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலையை பயனாளியிடம் வழங்கினார்.
மேலும், தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் கீழஅரசடி கடலோர கிராம மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக தூத்துக்குடி வ.உ.சி துறைமுக பொறுப்புக் கழகத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் 8 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் என மொத்தம் 240 பயனாளிகளுக்கு ரூ.40 இலட்சத்து 39 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பயனாளிகளுக்கு வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) தி.புவனேஷ்ராம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சுதேசி திருவிழா டிச. 26இல் தொடக்கம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 7:32:18 AM (IST)

திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 7:28:04 AM (IST)

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)










