» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
லாரி சக்கரத்தில் சிக்கி புரோட்டா மாஸ்டர் பலி
திங்கள் 16, ஜூன் 2025 3:18:57 PM (IST)
எட்டயபுரத்தில் லாரியை பின்னோக்கி எடுத்தபோது, சாலையோர தடுப்பு சுவரில் உறங்கிய புரோட்டா மாஸ்டர், டயரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள குமரெட்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அழகர்சாமி மகன் விநாயகமூர்த்தி (27) இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று காலையில் வேலைக்கு சென்று விட்டு இரவு எட்டயபுரம் வந்தவுடன் பைபாஸில் சாலையோர தடுப்பு சுவரில் உறங்கியுள்ளார்.
அதன் அருகே மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் டேங்கர் லாரி நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலையில் டேங்கர் லாரி டிரைவர் தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெள்ளையன் மகன் செல்வ முருகன் (41) வண்டியை நகற்றும் பொழுது எதிர்பாராத விதமாக லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்து எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விநாயகமூர்த்தியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சுதேசி திருவிழா டிச. 26இல் தொடக்கம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 7:32:18 AM (IST)

திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 7:28:04 AM (IST)

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)










