» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க குவிந்த மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு
திங்கள் 16, ஜூன் 2025 3:16:35 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கள் கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. கடந்த வாரம் திங்கட்கிழமை அரசு விடுமுறை என்பதால் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவில்லை. இதனால் இன்று ஏராளமான பொதுமக்கள் மனு கொடுக்க குவிந்தனர். இதனால் மனு பதிவு செய்யும் இடத்தில் நீண்ட வரிசை காணப்பட்டது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். ஆனால் ஒரே ஒரு கவுன்டர் மட்டும் இயக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் வெகுநேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மனுக்களை பதிவு செய்தனர். இதனால் ஆண், பெண், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். பொதுமக்கள் நலனுக்காக கூடுதல் கவுண்டர்களை திறக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சுதேசி திருவிழா டிச. 26இல் தொடக்கம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 7:32:18 AM (IST)

திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 7:28:04 AM (IST)

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)










