» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெற்றோர் ஆசிரியர் கழக தேர்தலை ரத்து செய்ய வேண்டும் : ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை!
திங்கள் 16, ஜூன் 2025 12:24:30 PM (IST)

வேம்பார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர்களுக்கு சரியான முன்னறிவிப்பு இன்றி நடைபெற்ற பெற்றோர் - ஆசிரியர் கழக தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளியில் பயலும் மாணவ, மாணவியரின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு : தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் வட்டம், வேம்பார் கிராமத்தில் இயங்கி வரும் வேம்பார் அரசு மேல்நிலை பள்ளியில் கடந்த பதினாறு வருடங்களுக்கு மேலாக பெற்றோர் ஆசிரிய கழக தேர்தல் முறையாக நடைபெறாமல் இருந்து வந்தது தனது குழந்தைககளை ஆங்கில வழி கல்வியில் படிக்க வைத்து விட்டு அரசு பள்ளியில் பெற்றோர் ஆசிரிய கழக தலைவராக செயல்பட்டு வந்தார்.
எனவே பெற்றோர்கள் மத்தியில் புதிதாக மாற்று நபரை தேர்வு செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக அரசு பள்ளியில் கோரிக்கை வைத்து வந்தோம். அதன் அடிப்படையில் தற்போது தேர்வு முறையில் தலைவர் தேர்வு செய்ய பட வேண்டும் என்றும் தலைவராக நிற்பவரின் பிள்ளைகள் வேம்பார் அரசு பள்ளியில் படிப்பவராக இருக்க வேண்டும் என்ற விதிமுறை அடிப்படையில் தேர்தல் நடத்துவது எனவும் அணைத்து பெற்றோர்களுக்கும் தபால் மூலம் தகவல் தெரிவித்து தேர்தலை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் இதற்கு நேர்மாறாக பெற்றோர்களுக்கு முறையான தபால் அனுப்பாமலும் ஆங்கில வழிகல்வியில் தனது குழந்தைகளை படிக்க வைத்திருக்கும் தினேஷ் குமார் என்பவரை தலைமை ஆசிரியரே ஏற்பாடு செய்து பல தில்லு முல்லு வேலைகளை செய்து தினேஷ்குமார் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளார்.
680 க்கு மேல் படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு சரியான முன்னறிவிப்பு இன்றி ஒரு தலை பட்சமாக நடத்தபட்டுள்ளது. பெற்றோர் ஆசிரிய கழக தேர்தல் எவ்வாறு நடை பெற வேண்டும் என்ற அரசின் வழிகாட்டு முறையை பின்பற்றாமல் நடைபெற்ற இத்தேர்தலை ரத்து செய்தும் இதற்கு உடந்தையாக செயல்பட்ட தலைமை ஆசிரியரை பணியிட மாற்றம் செய்து மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
Vembar..peoplesJun 16, 2025 - 01:48:49 PM | Posted IP 172.7*****
180 vote entry.. 36 vote la unga team loss... ..notification vittu propare ra than election nadanthuchu... full fraud team
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சுதேசி திருவிழா டிச. 26இல் தொடக்கம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 7:32:18 AM (IST)

திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 7:28:04 AM (IST)

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)











Vembar.peopleJun 16, 2025 - 02:14:10 PM | Posted IP 162.1*****