» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி உப்பாற்று ஓடையில் செத்து மிதந்த மீன்களால் பரபரப்பு
சனி 14, ஜூன் 2025 11:24:21 AM (IST)

தூத்துக்குடி அருகே உப்பாற்று ஓடையில் செத்து மிதந்த மீன்களால் பரபரப்பு நிலவியது.
தூத்துக்குடியில் இருந்து தருவைகுளம் செல்லும் வழியில் கோமஸ்புரம் அருகே உப்பாற்று ஓடை உள்ளது. இந்த ஓடையில், உப்பளங்களில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர், மழைக்காலங்களில் வரும் மழைநீர் ஆகியவை கடலுக்குச் சென்று கலக்கும். இந்த நிலையில் இந்த உப்பாற்று ஓடையில் அதிகளவு மீன்கள் செத்து மிதந்தன. பெரும்பாலான மீன்கள் ஓடையின் கரையிலும் ஒதுங்கி கிடந்தன.
இதனால் துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டனர். இறந்த மீன்களை சிலர் அள்ளிச் சென்றனர். ஏற்கெனவே கடந்த ஆண்டு இந்த ஓடையின் அருகே உள்ள மீன் பதப்படுத்தும் ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் ஓடையில் உள்ள நீர் இளஞ்சிவப்பு நிறமாக இருந்தது.
இதனால், 3 ஆலைகளின் செயல்பாட்டை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில், தற்போது இந்த ஓடையில் மீன்கள் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சுதேசி திருவிழா டிச. 26இல் தொடக்கம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 7:32:18 AM (IST)

திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 7:28:04 AM (IST)

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)










