» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்திற்கு தேசிய விருது
வெள்ளி 13, ஜூன் 2025 8:19:24 PM (IST)

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்திற்கு செலவு நிர்வாகத்திற்காக தேசிய விருது வழங்கப்பட்டது.
தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்திற்கு 2024 ஆம் வருடத்திற்கான செலவு நிர்வாகத்திற்காக, இந்திய அடக்கவிலை நிர்ணய கணக்கியல் நிறுவனம் போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பிரிவின் கீழ் (முதல் இடம்) தேசிய விருது வழங்கியுள்ளது. வ.உ. சிதம்பரனார் துறைமுகம் இவ்விருதை 7 முறையாக பெற்றுள்ளது. இதற்கு முன் 2008, 2012, 2015, 2016, 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் விருதை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்விருது, வ.உ. சிதம்பரனார் துறைமுகம் சரக்கு கையாளும் செயல்பாட்டு திறனை அதிகரிப்பதற்காக எடுக்கபட்ட அனைத்து முயற்சிகளிலும் அதன் ஒட்டு மொத்த செலவீனத்தை குறைத்ததற்காக துறைமுகத்திற்கு வழங்கப்பட்டது. மனிதவள மேம்பாட்டை மேம்படுத்துதல், சரக்கு கையாளும் திறன் அதிகரிப்பு மற்றும் நிலையான மின் ஆற்றல் ஆகியவற்றினை கடைபிடித்தன் மூலம் துறைமுகம் இச்சாதனை படைத்தது.
இந்த குறிப்பிடத்தக்க வெற்றிக்கு துறைமுகத்தின் இழுவை கப்பல்களுக்கு தளத்திலிருந்து மின்சாரம் வழங்குதல், மின்சாரத்தினால் இயங்க கூடிய வாகனங்களை பயன்படுத்துதல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி செய்தல் போன்ற செயல்பாடுகள் முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. ஆற்றல் திறன்மிக்க உபகரணங்களை பயன்படுத்துவதின் மூலமும், LED விளக்குகளை பயன்படுத்துவதின் மூலமும், டீசலின் மூலம் இயங்க கூடிய சரக்கு கையாளும் இயந்திரங்களை மின்னாற்றல் மூலம் இயங்க கூடிய இயந்திரங்களாக மாற்றுதல், எரிபொருள் பயன்பாடு குறைக்கப்பட்டு அதனிமித்தம் மாசுபாடு குறைக்கப்படுகிறது. 2023-24 -ஆம் நிதியாண்டில் இயக்க விகிதாச்சாரம் 29.45 சதவிகிதம் ஆகும், இதன் மூலம் இந்திய துறைமுகங்களில் தலைசிறந்த நிர்வாக திறனை சூட்டிக்காட்டுகிறது.
மேலும் கார்ப்பரேட் பிரிவில் செலவு நிர்வாகத்தின் செலவு மேலாண்மை நடைமுறைகளை ஊக்குவித்து அங்கீகரிக்கும் விதமாக பாராளுமன்ற சட்டத்தின் கீழ் இயங்கி வரும் இந்திய அடக்கவிலை நிர்ணய கணக்கியல் நிறுவனம் (ஐளெவவைரவந ழக ஊழளவ யுஉஉழரவெயவெள ழக ஐனெயை) மூலம் இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்விருதானது உற்பத்தி, சுகாதாரம், ஆலோசனை, நிதி சேவை, காப்புரிமை, மின் விநியோகம் மற்றும் பரிமாற்றம், தகவல் தொழல்நுட்பம், உள்கட்டமைப்பு, கட்டுமான சேவைகள், போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் போன்ற பல்வேறு பிரிவின் கீழ் இவ்விருதுகள் வழங்கப்படுகிறது.
துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித், கூறுகையில், நிதி நிர்வாகத்தின் மீதான துறைமுகத்தின் தொடர்ச்சியான கவனம் 2021-22 -ஆம் நிதியாண்டின் இயக்க விகிதாச்சாரம் 41.28% -லிருந்து 2023-24 ஆம் நிதியாண்டில் 29.45%- ஆக குறைய வழிவகுத்தது. இது சிறப்பான தரத்துக்கும் நிலைத்தன்மைக்குமான துறைமுகத்தின் அர்ப்பணிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்று கூறினார்.மேற்கண்ட தகவலை வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
மக்கள் கருத்து
Vijayaraj driverJun 15, 2025 - 12:00:05 PM | Posted IP 172.7*****
போதை ஒழிக்க வேண்டும்
Vijayaraj driverJun 15, 2025 - 11:57:41 AM | Posted IP 162.1*****
எல்லாம் ஓகே தான் அதிகப்படியான தூசிகளில் எங்கள் வாழ்க்கை குறைய தொடங்குகிறது வளர்ச்சி எல்லாம் ஓகே தான் கரி தூசியில் டிரைவர் மட்டும் இல்லை அதிகப்படியான தொழிளர்கள் உடல் நிலை யார் அரசாங்கம் பொறுப்பு ஏற்குமா தண்ணீர் அடிக்கடி ரோடல்யும் அடிக்க மாட்டிங்கங்க plot அடிக்க மாட்டிங்க
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)











அதுJun 15, 2025 - 12:01:03 PM | Posted IP 172.7*****