» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி ரயில் நிலைய அபிவிருத்தி பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் : பயணிகள் சங்கம் கோரிக்கை
செவ்வாய் 10, ஜூன் 2025 8:17:16 PM (IST)
தூத்துக்குடி கீழூர் ரயில் நிலைய அபிவிருத்தி பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் செயலாளர் மா. பிரமநாயகம் தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில், "தூத்துக்குடி ரயில் நிலையத்தில் 1வது நடைமேடை விஸ்தரிப்பு இரண்டு மற்றும் மூன்று நடைமேடைகளில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி மற்றும் மூன்றாவது பிளாட்பாரத்தில் சிக்னல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் சற்று மந்தமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் "பிட்லைன் கூடுதல் பெட்டிகளுக்கு விஸ்தரிப்பு" பணிகளும், மேற்கண்ட பணிகளால் தாமதம் ஆகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் தாமதப்படுத்துவதின் காரணத்தால், இந்த முறை கோடைகால சிறப்பு ரயில் தூத்துக்குடிக்கு இயக்கப்படவில்லை. தூத்துக்குடி-சென்னை முத்துநகர் விரைவு ரயில் தற்போது கூட அதிக அளவு காத்திருப்போர் பட்டியல் தினசரி காணப்படுகிறது.
இது குறித்து தங்களிடம் கடிதங்கள் மூலமாக விளக்கிக் கூறியும் சிறப்பு ரயில்கள் இந்த முறை இயக்கப்படவில்லை. ஆதலால் இப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். தற்போது தூத்துக்குடி சென்னை முத்து நகர் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டி (II SL-1) ஒன்று தற்காலிகமாக அவ்வப்போது இணைத்தமைக்கு தங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் கீழ்க்காணும் கோரிக்கைகளை விரைவாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
1) வண்டி எண். 12693-12694 தூத்துக்குடி-சென்னை, சென்னை-தூத்துக்குடி முத்துநகர் ரயிலில்கூடுதலாக(IISL-1) இரண்டாம் வகுப்பு படுக்கைவசதிஒரு
1கோச்உடனடியாகநிரந்தரமாக இணைக்கப்படவேண்டும்.
2) வண்டி எண். 16765-16766 வாரத்தில் இரண்டு முறை தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை வாரத்தில் மூன்று நாட்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி-மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம்-தூத்துக்குடிவிரைவு ரயிலை கூடிய விரைவில்தினசரி ரெயிலாகவும் மாற்றதங்கள் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
3) தூத்துக்குடி மேலூர் நிலையத்தில் அனைத்து ரயில்களும் UP/DOWN நின்று செல்ல நிறுத்தம் உடனடியாக வழங்கப்படவேண்டும்.
4) வண்டி எண். 16791-16792 தூத்துக்குடி- பாலக்காடு, பாலக்காடு- தூத்துக்குடி விரைவு ரயிலில் இரண்டு ஏசி (3rd A/c -1, 2nd A/c -1) கோச்சுகள் விரைவாக இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
5) தூத்துக்குடி- சென்னை முத்துநகர் ரயில் இயக்கப்பட்டு கிட்டத்தட்ட வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் இன்று வரை தூத்துக்குடிக்கு ஒரே ஒரு ரயில் தான் சென்னைக்கு இயக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த தூத்துக்குடி - சென்னை முத்துநகர் ரயில் வருடம் முழுவதும் காத்திருப்போர் பட்டியல் தான் காணப்படுகிறது. இந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு ஒரு இரவு நேர ரயில் இயக்க தங்கள் நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம்.
6) மதுரை- லோக்மான்ய திலக் விரைவு ரயிலை தூத்துக்குடி வரை உடனடியாக நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
7) திருச்சி-காரைக்குடி, காரைக்குடி-விருதுநகர் ரயிலை தூத்துக்குடி வரை நீடிக்க,நடவடிக்கை எடுக்க வேண்டும்.
8) தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு பகல் நேர லிங்க் எக்ஸ்பிரஸ் ஓடியதற்கு பதிலாக, தூத்துக்குடியில் இருந்து மதுரை திருச்சி வழியாக பகல் நேரத்தில் சென்னைக்கு ஒரு நேரடி ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
9) தூத்துக்குடி திருநெல்வேலி தென்காசி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தூத்துக்குடியில் இருந்து அதிகாலையில் திருநெல்வேலி - தென்காசி-செங்கோட்டை-புனலூர் வழியாககொல்லத்திற்கு "இண்டர்சிட்டி ரயில்” இயக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
GANESH R SJun 11, 2025 - 10:55:40 AM | Posted IP 162.1*****
தூத்துக்குடி கோயம்புத்தூர் ரயில் பகல் நேரத்தில் ஒரு ரயிலும் இரவு ரயிலும் விரைவு ரயில் ஆக தெற்கு ரயில்வே ஆவண செய்ய வேண்டும் என்று தூத்துக்குடியில் பயணிகள் தங்கம் வேண்டுகோள் விடுக்க வேண்டும்
வாழ்த்துகள்Jun 10, 2025 - 08:21:09 PM | Posted IP 172.7*****
கண்டு கொள்ளாத ஊடகங்கள்
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)











tuticorianJun 11, 2025 - 11:40:33 AM | Posted IP 104.2*****