» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பள்ளி அருகே ரவுண்டானா பணியை விரைவு படுத்த வேண்டும்: சிபிஎம் வலியுறுத்தல்!
சனி 7, ஜூன் 2025 12:50:23 PM (IST)
தூத்துக்குடியில் செயின்ட் தாமஸ் பள்ளி அருகே ரவுண்டானா அமைக்கும் பணியை விரைவு படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர செயலாளர் எம்.எஸ். முத்து விடுத்துள்ள அறிக்கையில், "தூத்துக்குடி பிரதான சாலை அதாவது ECR இணைப்பு சாலையில் செயின்ட் தாமஸ் பள்ளி அருகே ரவுண்டா அமைக்கப்பட்டு வருகிறது. அந்த சாலையில் போக்குவரத்து நெருக்கடி உள்ள பகுதியாகும். மேலும் பள்ளிகள் நிறைந்த பகுதி, பள்ளி மாணவர்கள் அதிகம் பேர் சைக்கிள்களில் சென்று வருகின்றனர்.
மேலும் தூத்துக்குடி நகரையும் ECR சாலையையும் இணைப்பதால் பேருந்துகள் மற்றும் கார்கள் அதிகமான செல்கின்றன. இந்நிலையில் ரவுண்டானா அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சரள் விரிக்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் பணிகள் முடிக்கப்படாமல் வாகனங்கள் செல்லும் போது புழுதி கிளம்பி சுவாசப் பிரச்சனை ஏற்படுவதோடு விபத்தும் ஏற்படும் நிலை உள்ளது.
மேலும் ரவுண்டானாவின் விட்டத்தை சிறிது குறைத்தால் நல்லது. எனவே நெடுஞ்சாலைத்துறை ரவுண்டானா அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென தூத்துக்குடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகரக்குழு வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
பாண்டியராஜன் கு. சிவகாசி (பாரைப்பட்டி)Jun 7, 2025 - 02:12:54 PM | Posted IP 172.7*****
இதுபோன்ற நடவடிக்கைகளை அனைத்து நகரங்களிலும் அந்தந்த நகராட்சி நிர்வாகம் செய்தால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள்
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)











அந்தோணிசாமிJun 7, 2025 - 08:19:44 PM | Posted IP 172.7*****