» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கடலில் குதித்து மீனவர் தற்கொலை: போலீசார் விசாரணை
சனி 7, ஜூன் 2025 11:17:16 AM (IST)
தூத்துக்குடியில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகில் இருந்து கடலுக்குள் குதித்து மீனவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி தாளமுத்து நகர் ஜேசு நகரைச் சேர்ந்தவர் குருஸ் மஸ்தான் மகன் பரிமளம் (47). மீனவர். இவர் கடந்த ஜூன் 1ஆம் தேதி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து வல்லத்தில் 7 பேருடன் கடலுக்குள் தங்கி மீன் பிடிக்க சென்றாராம். நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மற்றொரு மீனவருடன் தகராறு ஏற்பட்டதாம்.
இதையடுத்து சக மீனவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை திரேஸ்புரம் கடற்கரை நோக்கி வந்து கொண்டிருந்தபோது திடீரென பரிமளம் கடலுக்குள் குதித்துள்ளார். இதைப் பார்த்த சக மீனவர்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு வந்த டாக்டர் அவரை பரிசோதித்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தூத்துக்குடி மரைன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து சம்பவ இடத்திற்கு சென்று சடலைத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைதை்தார். மேலும் சம்பவம் தொடர்பாக சக மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)

தூத்துக்குடியில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 10 மாணவிகள், டிரைவர் காயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:17:22 AM (IST)

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)










