» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குறி சொல்பவரை கத்தியால் வெட்டியவர் கைது!
புதன் 4, ஜூன் 2025 11:20:00 AM (IST)
தூத்துக்குடியில் தொழிலில் நட்டம் ஏற்பட்டதால் குறி சொல்பவரை கத்தியால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் மகன் மணிகண்டன் (42). இவர் கனகசபாபதி தெருவில் சந்தன மாரியம்மன் கோவில் வைத்து பூஜை செய்து குறி சொல்லி வருகிறார். இவரிடம் இனிகோ நகர் ஜேசையா மகன் அந்தோணி (44) என்பவர் குறி கேட்பது வழக்கமாம்.
இந்நிலையில், தனது தொழிலில் நஷ்டம் ஏற்படதற்கு மணிகண்டன்தான் காரணம் என்று அந்தோணி கருதியதால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று குடிபோதையில் வந்த அந்தோணி, மணிகண்டனை கத்தியால் வெட்டியுள்ளார். இதில் அவரது கை விரல் மற்றும் இடது கண்ணத்தில் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து புகாரின் பேரில் மத்தியபாகம் போலீசார் வழக்குப் பதிந்து அந்தோணியை கைது செய்தனர். இதனிடையே அந்தோணி தன்னைத் தானே கத்தியால் வெட்டிக் கொண்டு மணிகண்டன் தன்னை வெட்டியதாக நாடகம் ஆடியுள்ளார். காயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)

தூத்துக்குடியில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 10 மாணவிகள், டிரைவர் காயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:17:22 AM (IST)

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)










