» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி பக்கிள் ஓடையை அகலப்படுத்த நடவடிக்கை : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!
வெள்ளி 30, மே 2025 4:22:33 PM (IST)

தூத்துக்குடியில் பக்கிள் ஓடையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் மதுபாலன் துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் 10க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக மேயர் பேசியபோது "தூத்துக்குடி மாநகராட்சியில் கூடுதலாக 992 சாலைகள் போடும் பணிகள் தொடங்கியுள்ளது. அனைத்து சாலைகளும் விரைவாக போடப்படும். மாநகராட்சியில் 6 கிலோ மீட்டர் தூரம் உள்ள பிரதான கழிவுநீர் கால்வாயான பக்கிள் ஓடையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் டிஜிட்டல் போர்டுகள் வைப்பதை தவிர்க்க வேண்டும். மாநகராட்சி அனுமதி இன்றி வைக்கப்படும் டிஜிட்டல் போர்டுகள் அகற்றப்படும். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பெறப்பட்ட 2500க்கு மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றார்.
கூட்டத்தில் கூட்டத்தில் துணை பொறியாளர் சரவணன், மண்டல தலைவர்கள் வழக்கறிஞர் பாலகுருசாமி, கலைச்செல்வி திலகராஜ், நிர்மல் ராஜ், அன்னலட்சுமி கோட்டுராஜா, சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், பணிகள் குழு தலைவர் கீதா முருகேசன், அப்பாயின்மென்ட் குழு தலைவர் சந்திரபோஸ், கல்வி குழு தலைவர் அதிர்ஷ்ட மணி ரவீந்திரன், அதிமுக கொறடா வழக்கறிஞர் மந்திரமூர்த்தி, திமுக மாமன்ற உறுப்பினர்கள் ரெங்கசாமி, முத்துவேல், அந்தோணி பிரகாஷ், மெடின்டா டேனியல், ரெக்சிலின், ஜாக்லின் ஜெயா, ஜெயசீலி, நாகேஸ்வரி, பவானி, வைதேகி, காங்கிரஸ் கட்சி மாமன்ற உறுப்பினர் எடிண்டா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாமன்ற உறுப்பினர் மும்தாஜ், உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மக்கள்Jun 2, 2025 - 12:01:20 PM | Posted IP 104.2*****
இனி கொஞ்ச நாள்ல செப்டிக் டேங்க் ஓடையாக மாறி விடும்
BhaskaranJun 1, 2025 - 12:23:53 PM | Posted IP 172.7*****
தூத்துக்குடியின் கூவம் பக்கிள் ஒடை
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)











கணேஷ்Jun 7, 2025 - 12:00:59 AM | Posted IP 162.1*****