» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஸ்ரீவைகுண்டம் - ஆழ்வார் திருநகரி 1 லட்சம் பனை விதை விதைக்க நடவடிக்கை: ஆட்சியருக்கு பாராட்டு!
வியாழன் 29, மே 2025 9:27:14 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணியை சுத்தப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு முன்னாள் மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில் ராஜ் அவர்களிடம் ஸ்ரீவைகுண்டம் & ஆழ்வார் திருநகரி இடையே உள்ள தாமிரபரணி ஆற்றில் முள்செடிகளை பிடிங்கி, அவ்விடத்தில் மரக்கன்று நட்டு மாடல் தாமிரபரணியாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அதற்கான ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் பணி மாறுதல் ஆகி விட்டார். இதற்கிடையில் 2023 டிசம்பர் மாதம் பெய்த மழை வெள்ளத்தில் ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஏரல் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கு காரணம் ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார் திருநகரி இடையில் அடர்ந்து காணப்படும் முள்செடிகள் தான். எனவே இந்த முள்செடிகளை அகற்றினால் மட்டுமே வருங்காலத்தில் வெள்ளம் ஊருக்குள் புகுவதை தடுக்க இயலும் என்ற நிலை ஏற்பட்டது.
இதற்கிடையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் உள்ள முள்செடிகள் மற்றும் புதர்களை அகற்றும் பணி கடந்த ஜுலை 6 ந்தேதி கலியாவூர் மருதூர் அணையில் துவங்கியது. இந்த பணியை கனிமொழி எம்.பி துவக்கி வைத்தார்கள். முன்னாள் மாவட்ட ஆட்சித்தலைவர் லெட்சுமிபதி முன்னிலை வகித்தார். எக்ஸ்னோரோ நி-றுவனத்தின் மூலம் வாடகை இல்லா இயந்திரம் மூலம், தனியார் மற்றும் அரசு உதவியுடன் நதியை சுத்தப்படுத்தும் பணி துவங்கியது.
மருதூர் அணை, செந்நெல்பட்டி, ஆழிகுடி ஆகிய பகுதியில் நடந்தது. இதற்கிடையில் மாவட்ட ஆட்சியராக இளம் பகவத் பொறுப்பேற்று கொண்டார். அவர் முயற்சியால் தொடர்ந்து இந்த பணி நடந்தது. முத்தாலங்குறிச்சி ஆறாம்பண்ணை, கொங்கராயகுறிச்சி ஆகிய பகுதிகளில் இந்த பணி நடந்து முடிந்துள்ளது. தற்போது மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் அவர்கள் ஆலோசனை படி நிதி பெறப்பட்டு மீண்டும் இந்த பணி துவங்கியது.
தொடர்ந்து இந்த பணியை ஸ்ரீவைகுண்டம் பகுதியில் துவங்கினர். ஸ்ரீவைகுண்டம் வியாபாரிகள் சங்கத்தினர் ஆதரவில் இந்த பணி நடந்தது. கணியான் காலனியில் இருந்து துவங்கி நதிக்கரை முருகன் கோயில் வரை இந்த பணி நடந்தது. இதில் கரையில் அடர்ந்து காணப்பட்ட முள்செடிகள் அகற்றப்பட்டது. தாமிரபரணி வரலாற்றில் புதர் போல் அடர்ந்து காணப்பட்ட இந்த முள்செடிகளை அகற்றினர். அதன் பின் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுக்கு கீழ் உள்ள பகுதியில் முள்செடி பிடுங்க வாடகையில்லா இயந்திரம் வந்தது. அந்தசயத்தில் வனத்துறையினர் இவ்விடத்தில் முள்செடியை பிடிங்க கூடாது என தடைப்போட்டனர்.
ஆனால் வியாபாரிகள் சங்க தலைவர் முத்துமாலை, செயலாளர் பாலசுப்பிரமணியன், வியாபாரிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் சந்துரு, மாவட்ட துணைத்தலைவர் தங்கபழம் பொன் இசக்கி உள்பட சங்கத்தினர் வனத்துறையை கண்டித்து அறிக்கை விட்டனர். எப்படியும் முள்செடிகளை அகற்றியே தீருவோம் என போராடினர். இதன் பயனாக மீண்டும் பணி துவங்கியது. தற்போது இந்த பகுதியில் புதர் போல் வளர்ந்து கிடக்கும் முள்செடிகள் அகற்றப்பட்டது. இதனால் இந்தபகுதியில் இதுவரை அடர்ந்து காணப்பட்ட முள்செடிகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.
இதற்கிடையில் பிடிங்கி போட்ட முள்செடிகள் குவிந்து கிடக்கிறது. இந்த செடிகள் மழை வெள்ளம் வரும் போது ஆற்று வெள்ளத்தில் சென்று பாலங்களில் அடைத்து அந்த பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும். எனவே இந்தமுள்செடிகளை நெருப்பு வைத்து அழிக்கும் பணியை மேல ஆழ்வார் தோப்பு கிராம உதயம் கிளை நிறுவனம் செய்ய முன்வந்து உள்ளது. இந்த பணியை துவங்க ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனையில் தென்கால் பிரிவு அலுவலர் அமீர்கான், ஸ்ரீவைகுண்டம் யூனியன் அலுவலக மேலாளர் விஜய் , கணக்கர் நம்பி ராஜன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கிராம உதயம் மேலாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். அவர்கள் வேறு பாதிப்பு இல்லாமல் முள்செடிகளை அகற்றுவது குறித்து ஆலோசனை செய்தனர். அதன் பின் முள்செடிகள் அகற்றும் பணியை பார்வையிட்டனர். தொடர்ந்து இந்த பகுதியில் கிராம உதயம் மூலம் 1 லட்சம் பனை விதைகளை விதைக்கவும் நடவடிக்கை எடுத்தனர்.
ஸ்ரீவைகுண்டம் முதல் ஆழ்வார் திருநகரி வரை உள்ள தாமிரபரணி ஆற்றில் தற்போது தென் கரையில் முள்செடிகளை அகற்றி கரையை செம்மைப்படுத்தும் பணியை பொதுப்பணித்துறையினர் துவங்கியுள்ளனர். வடகரை மற்றும் ஆற்றுக்குள் இருக்கும் முள்செடிகளை அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியரின் நிதி உதவி மூலம் எக்ஸ்னரோ நிறுவனத்தின் வாடகை இயந்திரம்மூலம் செய்து வருகின்றனர். இந்த பணி முடியும் போது ஸ்ரீவைகுண்டம், ஏரல் பகுதி ஆற்று வெள்ளத்தில் பாதிக்கப்படாமல் இருப்பதோடு இவ்விடம் தாமிரபரணியில் மாடல் இடமாக மாறும் என தாமிரபரணி ஆர்வலர்கள் நம்புகிறார்கள்.
தாமிரபரணி ஆர்வலர்கள் நம்பிக்கை!
தாமிரபரணி வரலாற்றில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தாராக தாமஸ் பயஸ் பணி புரியும் போது அணையின் கீழ் பகுதி சுத்தப்படுத்தப்பட்டு, அந்த பகுதியில் காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. அதன் பின் தற்போது இவ்விடம் முள்செடி பிடிங்கப்பட்டு வருகிறது. விவசாய சங்கத்தினை சேர்ந்தவர்களும் , தாமிரபரணி ஆர்வலர்களும் உங்களோடு முதல்வர் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் ஸ்ரீவைகுண்டம் வந்த போது கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று தற்போது பணி வேகமாக நடக்கிறது.
இதற்கு தாமிரபரணி ஆர்வலர்கள் மற்றும் ஸ்ரீவைகுண்டம் விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரைபாராட்டினர். ஸ்ரீவைகுண்டம் முதல் திருப்பதியாகவும், ஆழ்வார் திருநகரி கடைசி திருப்பதியாகவும் விளங்குகிறது. எனவே இந்த இரு இடத்திற்கும் இடையில் முள்செடிகயை பிடிங்கி, சுமார் 1 லட்சம் பனை விதைகளை விதைத்து மாடல் தாமிரபரணியாக மாவட்ட ஆட்சியர் மாற்றி தருவார் என தாமிரபரணி ஆர்வலர்கள் நம்பிக்கையோடு உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது கார் மோதியதில் எலெக்ட்ரிசியன் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:39:17 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது - மேலும் மூவருக்கு வலைவீச்சு!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:26:04 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)










