» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அனைத்து திட்டங்களும் பொதுமக்களை சென்றடைய வேண்டும் : கண்காணிப்பு அலுவலர் கோ.பிரகாஷ்

வியாழன் 22, மே 2025 9:06:40 PM (IST)



அனைத்து திட்டங்களும் பொதுமக்களுக்கு சென்றடைய அலுவலர்கள் அனைவரும் துரிதமாக செயல்பட வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (22.05.2025) பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் மற்றும் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் கோ.பிரகாஷ், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, சுகாதாராத் துறை, வருவாய்த் துறை, நெடுஞ்சாலைகள் துறை, கூட்டுறவுத் துறை, பொதுப்பணித்துறை (கட்டிடங்கள் மற்றும் பராமரிப்பு), வனத்துறை, தூத்துக்குடி மாநகராட்சி, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்), மகளிர்த் திட்டம், தொழிலாளர் நலத்துறை, போக்குவரத்துத் துறை, காவல் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, திறன் மேம்பாட்டுக் கழகம், பள்ளிகல்வித் துறை, ஆவின், கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, மாவட்ட தொழில் மையம், தாட்கோ, சிறப்பு திட்ட செயலாக்கம், பொதுவிநியோகத் திட்டம், நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள், வேளாண் சந்தைப்படுத்துதல், குழந்தைகள் பாதுகாப்புத்துறை, சத்துணவு, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், உயர்கல்வித் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். 

மேலும், நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் வெள்ளப் பாதிப்பு நிரந்தரப் பணிகளான கரையைப் பலப்படுத்துதல், வரத்துக் கால்வாயினை தூர்வாருதல், மடைகளை சீரமைத்தல், கால்வாயின் தலை மதகினை மறுசீரமைத்தல், வெள்ளத்தடுப்புச் சுவர் அமைத்தல் போன்ற பணிகள் குறித்தும், நடைபெற்றுவரும் பணிகள் குறித்தும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டுத்திட்டம், முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத்திட்டம், பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டபணிகளின் கீழ் நடைபெற்றுவரும் திட்டப்பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்கள். மேலும், பல்வேறு திட்டங்களின் கீழ் கட்டப்படும் கட்டடங்கள் எழில்மிகு தோற்றத்தில் தரமிக்க கட்டடமாக கட்ட வேண்டும் என துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், மாநகர மற்றும் ஊரகப் பகுதிகளில் இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் பட்டா மாறுதல் உள்ளிட்ட பணிகளை விரைவாக நிறைவு செய்து, பொதுமக்கள் பயன்பெறுவதை உறுதிசெய்யும் விதமாக ஊரக, நகர மற்றும் நத்தம் உட்பிரிவு மனுக்கள், முழுப்புலம் உள்ளிட்ட பணிகள் குறித்து, வருவாய்த்துறை மற்றும் நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை எவ்வித தொய்வும் இன்றி விரைவாக நிறைவு செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 

மேலும், பொதுமக்களிடையே நடைபழக்கத்தை ஊக்குவித்து உடல் நலத்தை மேம்படுத்திட தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ள நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் மூலமாக பொதுமக்களிடையே உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்தும், உணவுமுறைகள் குறித்தும் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எனவே, அனைத்துத் துறைகள் மூலமாக செயல்படுத்தப்பட்டுவரும் அனைத்து மக்கள் நலத்திட்டங்களும் பொதுமக்களுக்கு சென்றடைய அனைத்து அலுவலர்களும் துரிதமாக செயல்பட வேண்டும்.

முன்னதாக, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.136.15 கோடி மதிப்பிட்டில் சுமார் 3,21,108 சதுர அடி பரப்பளவில் தரைதளம் மற்றும் 7 தளங்களுடன் 650 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுவரும் அரசு பல்நோக்கு மருத்துவமனைக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் கோ.பிரகாஷ், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 

பின்னர், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட டூவிபுரம் மற்றும் சில்வர்புரம் பகுதிகளில் நீண்ட நாட்களாக குடியிருப்பவர்களுக்கு சிறப்பு வரன் முறை பட்டா வழங்குவரது தொடர்பாக கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றுவருவதை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் கோ.பிரகாஷ், நேரில் பார்வயிட்டு ஆய்வு செய்தார்.

இக்கூட்டத்தில், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி.இரா.ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education





Arputham Hospital



Thoothukudi Business Directory