» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கருவில் உயிரிழந்த குழந்தை வெளியேற்றம்: அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவர் விளக்கம்!

வியாழன் 22, மே 2025 8:55:58 PM (IST)

"கருவில் குழந்தை உயிரிழந்துள்ள நிலையில் தாயின் உடல் நிலையை பாதிக்காமல் வெளியேற்றதுவதே முதன்மை குறிக்கோள்" என்று தூத்துக்குடி அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி விளக்கம் அளித்துள்ளார்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இறந்த நிலையில் உள்ள குழந்தையை அறுவை சிகிச்சை செய்து அகற்றாமல் மருத்துவர்கள் அலட்சியம் செய்வதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர். 

இந்த நிலையில், இதுகுறித்து உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி வெளியிட்ட அறிக்கையில், "கருவில் வளரும் குழந்தை உயிரிழந்துள்ள நிலையில் தாயின் உடல்நலத்தை பாதிக்காமல், இயற்கையான பிரசவத்தின் மூலம் குழந்தையை வெளியேற்றுவதே முதன்மை குறிக்கோளாகும். முதலில், அந்த குழந்தை உயிரிழப்பிற்கு காரணமான சூழ்நிலைகள் மற்றும் கருப்பையின் வளர்ச்சி காலம் போன்றவை அறியப்படும். 

பிறகு, தாயின் உடல் நிலைச் சோதனைகள் குறிப்பாக, இரத்தம் உறைவதற்கான பரிசோதனைகள் போன்றவை மேற்கொள்ளப்படும். தாயின் நிலைமை நிலைத்திருக்கும்போது, சீரான முறையில் இயற்கை பிரசவம் செய்யப்படும். சிசேரியன் முறையை மிகுந்த அவசியம் உள்ள போது மட்டுமே மேற்கொள்வது நெறிமுறை. எந்த சூழ்நிலையிலும், தாயின் உடல்நலம் முக்கியமாக கருதப்படும் அதனை பாதிக்காமல் குழந்தையை வெளியேற்றும் வழி தான் பின்பற்றப்படும்.

இந்நிலையில், பிரசவத்தை தூண்டும் (Induction of Labor) சில மருத்துவ முறைகள் பின்பற்றப்படுகின்றன:

1. (Foley catheter) கருப்பையின் வாயில் (cervix) இடுவதன் மூலம், அதை விரிவடையச் செய்து பிரசவத்தை தூண்டும் முறை.

2. foley catheter விழுந்த பின் -இதன் கால அளவு 12 முதல் 24 மணி நேரம் வரை ஆகும் ‌.‌PGE2 Gel லை கருப்பையின் வாயில் இடுவதன் மூலம் பிரசவம் துவங்கச் செய்யப்படுகிறது. அல்லது 28 வாரங்களுக்கும் மேற்பட்ட காலத்தில் – Misoprostol மாத்திரைகள் 4 மணி நேரத்துக்கு ஒருமுறை வைக்கப்படும்

இந்த முறைகள் அனைத்தும் மருத்துவ நிபுணர்களின் கவனிப்பில், தாயின் உடல்நலத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. அவசர சிசேரியன் (LSCS) பெரும்பாலும் மேற்கொள்ளப்படாது, மிகவும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே செய்யப்படுகிறது என்று தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education


Arputham Hospital




Thoothukudi Business Directory