» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விளாத்திகுளத்தில் ஜமாபந்தி: 30 பயனாளிகளுக்கு இ-பட்டா!
வியாழன் 22, மே 2025 8:48:05 PM (IST)

விளாத்திகுளத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் 30 பயனாளிகளுக்கு இ-பட்டா வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 14ஆம் தேதி முதல் வருவாய் தீர்வாய முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் விளாத்திகுளம் வட்டத்தைச் சேர்ந்த மக்கள் முதியோர் உதவித் தொகை, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, உழவர் அட்டை உள்ளிட்ட பல்வேறு வகையான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
இதில் ஏற்கனவே 3 பயனாளிகளுக்கு உடனடியாக பட்டா மாறுதல் வழங்கப்பட்ட நிலையில் இன்று புதிதாக 30 இலவச வீட்டுமனை மனுக்கள் பரிசோதனை செய்யப்பட்டு பயனாளிகளுக்கு இ-பட்டாக்களை மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு பிரிவு) சங்கரலிங்கம் வழங்கினார்.
இந்நிகழ்வில் சிப்காட் தாசில்தார் சந்திரன், விளாத்திகுளம் தாசில்தார் ராமகிருஷ்ணன், துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள் உட்பட ஏராளமான கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)

தூத்துக்குடியில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 10 மாணவிகள், டிரைவர் காயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:17:22 AM (IST)

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)










