» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பட்டிணமருதூர் பகுதியில் தொல்லியல் அகழாய்வு: ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு

வியாழன் 22, மே 2025 5:05:51 PM (IST)



பட்டிணமருதூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள தொல் பொருட்களையும், தொல்லியல் அகழாய்வு நடைபெறவுள்ள இடத்தினையும்  மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் க.இளம்பகவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

‘உங்களைத் தேடிஉங்கள் ஊரில் திட்டம்” ஓட்டப்பிடாரம் வட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் களஆய்வு மேற்கொண்டார்

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டு மென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் மக்களை நாடி அவர்களின் குறைகளைத் தீர்க்க தொடங்கப்பட்ட ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், 21.05.2025 மற்றும் 22.05.2025 ஆகிய இரண்டு தினங்கள் ஓட்டப்பிடாரம் வட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் / சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் கள ஆய்வு மேற்கொண்டார்.

அதன்படி, நேற்றைய தினம் காலை முதல் ஓட்டப்பிடாரம் வட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் / சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்துகள ஆய்வு மேற்கொண்டு, பிற்பகலில் மாவட்ட நிலையிலான அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்கள். தொடர்ந்து மாலையில் ஓட்டப்பிடாரம் வ.உ.சி அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவு, மகப்பேறுப் பிரிவு, புற நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் தெற்கு ஆவரங்காடு கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பினை ரூ.4 இலட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மறுசீரமைப்புப் பணிகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.16.45 இலட்சம் செலவில் கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி மையக் கட்டுமானப் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், இன்று (22.05.2025) காலையில் ஓட்டப்பிடாரம் வட்டத்திற்குட்பட்ட பட்டிணமருதூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள தொல் பொருட்களை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, தொல்லியல் அகழாய்வு நடைபெறவுள்ள இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். தொடர்ந்து, பட்டிணமருதூர் பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவு மற்றும் குளோரின் சரியான அளவில் உள்ளதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, குடிநீர் சீராக வழங்கப்படுவது குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

ஆய்வின்போது, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் க.மகாலட்சுமி, இணை இயக்குநர் மருத்துவப் பணிகள் க.பிரியதர்ஷினி, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் ஆனந்த், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education


Arputham Hospital




Thoothukudi Business Directory