» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி 3ஆம் கேட் ரயில்வே மேம்பாலத்தில் இணைப்பு கம்பிகள் சேதம்: விபத்து அபாயம்

திங்கள் 19, மே 2025 8:53:19 AM (IST)



தூத்துக்குடி 3-ஆவது கேட் ரயில்வே மேம்பாலத்தில் சேதமடைந்துள்ள இணைப்பு கம்பிகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தூத்துக்குடி மாநகரை இரண்டாக பிரிக்கும் வகையில் ரயில்வே தண்டவாளம் அமைந்து உள்ளது. இதனால் மாநகரை இணைக்கும் வகையில் 4 ரயில்வே கேட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. ரயில் வரும் போது, இந்த கேட்டுகள் மூடப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் 3-வது ரயில்வே கேட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டது. 

இந்த மேம்பாலத்தில் அமைக்கப்பட்டு இருந்த கம்பிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேதம் அடைந்தது. இதனால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அந்த கம்பிகள் அகற்றப்பட்டு புதிதாக கம்பிகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் மீண்டும் பாலத்தின் நடுவில் இணைப்பு பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள கம்பிகள் சேதம் அடைந்து உள்ளன.

இந்த கம்பிகள் மேலெழும்பி வாகனங்கள் செல்லும் போது அதிர்ந்து கொண்டு இருக்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டு வருகிறது. மேலும், ேசதமடைந்துள்ள இந்த கம்பிகளை கடக்கும் வாகனங்களின் டயர்கள் சேதமடைந்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. ஆகையால் பெரும் சேதம் ஏற்படும் முன்பு பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


மக்கள் கருத்து

NOTEDமே 19, 2025 - 02:16:57 PM | Posted IP 162.1*****

Also side wall height is low, so chances for accident

Readerமே 19, 2025 - 10:12:24 AM | Posted IP 172.7*****

முன்னெல்லாம் இந்த பாலத்தின் முகப்பில் அதாவது பாலத்தின் வடபுறம் மற்றும் மேற்கு பகுதியில் கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என அறிவிப்பு பலகை இருக்கும்.. இப்போ வெகு சாதாரனமா 20feet container lorry போகுது.. 20ton 30ton weight ஏத்தி லாரிகள் போகுது.. இந்த பாலம் எப்படி விளங்கும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital




Thoothukudi Business Directory