» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு மருத்துவமனையில் ரூ.49 இலட்சம் மதிப்பில் புதிய கட்டடம் : கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்

திங்கள் 12, மே 2025 3:37:21 PM (IST)



தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மாநகராட்சி சார்பில் ரூ.49 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தைக் கனிமொழி எம்.பி திறந்து வைத்தார். 

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கலந்து கொண்டு, மருத்துவ துறையில் 25 மற்றும் 30 ஆண்டுகளுக்கு மேலாக சேவை புரிந்த செவிலியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். 

மேலும், தூத்துக்குடி மாநகராட்சி சார்பில்  உள்புற நோயாளிகளை உடனிருந்து பராமரித்துக் கொள்ளும் நபர்கள் தங்குவதற்காக ரூ.49.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தைக் கனிமொழி எம்.பி திறந்து வைத்தார். விழாவில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் ஐஸ்வர்யா, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மருத்துவமனை ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education


Arputham Hospital




Thoothukudi Business Directory