» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பி.எம். கிசான் திட்டத்தில் பதிவு செய்திட சிறப்பு முகாம் : விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு
வெள்ளி 9, மே 2025 3:16:13 PM (IST)
பி.எம். கிசான் திட்டத்தில் பதிவு செய்திட மற்றும் குறைகளை நிவர்த்தி செய்திட மே31ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் தங்கள் பெயரில் நிலம் உள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6ஆயிரம் விவசாயத்திற்கு தேவையான வேளாண் இடு பொருட்கள் வாங்கிட ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 48 ஆயிரத்து 762 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தின்கீழ் தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் எவ்வித விடுபாடின்றி பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் அலுவலகம், இந்திய அஞ்சலக கட்டண வங்கி அலுவலகங்கள் (Indian Post Payments Banks) மற்றும் பொது சேவை மையங்களில் வரும் மே 31ம் தேதி வரை நடை பெற உள்ளது.
இத்திட்டத்தில் 20வது தவணை வரும் ஜூன் மாதத்தில் விடுவிக்கப்பட்டு, வரவு வைக்கப்பட உள்ளதால், இம்முகாமில் தகுதியுடைய விவசாயிகள் தங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள், வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பது மற்றும் இகேஒய்சி செய்தல் போன்ற இவற்றில் ஏதாவது விடுபட்டிருந்தால் அதனை சரி செய்து விவசாயிகள் பயன் பெறலாம். பிஎம்கிசான் திட்ட வழிமுறைகளின்படி தகுதியுடைய விடுபட்ட விவசாயிகள் இத்திட்டத்தில் புதிதாக பதிவு செய்து சேர்ந்து பயன்பெறலாம்.
மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் பிஎம் கிசான் 19வது தவணைத்தொகை பெற்று வந்த விவசாயிகளில், 48,762 விவசாயிகளில் 15,937 விவசாயிகள் தங்களது நில உடமை பதிவு, இகேஒய்சி மற்றும் ஆதாருடன் வங்கி கணக்கை இணைப்பு செய்யாமல் உள்ளனர். எனவே, பிஎம்கிசான் திட்டத்தில் 15,937 விவசாயிகளும் நில உடைமைப் பதிவுகள் இகேஒய்சி பதிவு, வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு பணியினை மேற்கொண்டால் மட்டுமே 20வது தவணை பெற இயலும்.
மேலும், இத்திட்டத்தில் பயன்பெறும் பயனாளி இறந்து விட்டால் அவரது ஆதார் எண் மற்றும் இறப்புச் சான்றினை சம்பந்தப்பட்ட வட்டாரங்களில் சமர்ப்பித்து நிதியை நிறுத்தம் செய்ய வேண்டும். இறந்த பின்பும் தவணை தொகையை பெற்று வருவது ஆய்வில் கண்டறியப்பட்டால், அத்தொகையை வாரிசுதாரர்களிடமிருந்து வசூலிக்கப்படும். மேலும், பிஎம் கிசான் திட்டத்தில் இறந்தவர்களின் வாரிசுதாரர்கள் பயன்பெற தகுதியிருப்பின் தேவையான ஆவணங்களை பொது சேவை மையங்களில், சமர்ப்பித்து பதிவு செய்து இத்திட்டத்தில் பயன்பெறலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத். கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
Muruganமே 11, 2025 - 01:27:46 PM | Posted IP 172.7*****
Ithu thenkasi mavattathirku unda?
பழனிச்சாமி கரூர் மாவட்டம். அரவக்குறிச்சி தாலுக்கா. வெஞ்சமாங்கூடலூர் மேல் பாகம் மாமரத்துப்பட�மே 11, 2025 - 08:30:31 AM | Posted IP 162.1*****
ஐயா வணக்கம் எனக்கு அந்த கிஷன் சட்டத்தின் கீழ் நான்கு மாதத்திற்கு ஒரு முறை எனது வங்கிக் கணக்கில் வருவதில்லை ஒரு வருட காலமாக த பணம் வருவதில்லை நாங்கள் என்ன செய்ய வேண்டும்
ராமகிருஷ்ணன். பெ... சர்வராஜன்பேட்டைமே 11, 2025 - 08:11:51 AM | Posted IP 172.7*****
எனக்குபி.எம்.கிஷான்பணம்வரவில்லை
மேலும் தொடரும் செய்திகள்

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)

தூத்துக்குடியில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 10 மாணவிகள், டிரைவர் காயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:17:22 AM (IST)

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)











Rajeshமே 22, 2025 - 07:02:50 AM | Posted IP 172.7*****