» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் தும்பு ஏற்றுமதி குடோனில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பில் சேதம்!
சனி 26, ஏப்ரல் 2025 8:48:55 AM (IST)

தூத்துக்குடியில் தும்பு ஏற்றுமதி செய்யும் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தும்புகள் எரிந்து சேதம் ஆனது.
தூத்துக்குடி விஇ ரோட்டில் டிஎஸ்எப் வணிக வளாகம் எதிரே மில்லர் புரத்தைச் சேர்ந்த கிருஷ்ண சங்கர் என்பவருக்கு சொந்தமான தும்பு குடோன் உள்ளது. இங்கிருந்து தும்புகள் பேக் செய்யப்பட்டு வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும். இந்நிலையில் நேற்று இரவு தும்பு குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அருகே குடியிருப்புகளில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகர தீயணைப்புத் துறையினர் இரண்டு வண்டிகளில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ளான தும்பு எரிந்து சேதமாய் இருக்கும் என கூறப்படுகிறது.
தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் அருகே இருந்த குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. இதன் காரணமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த தீவிபத்து குறித்து மத்திய பாகம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)

தூத்துக்குடியில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 10 மாணவிகள், டிரைவர் காயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:17:22 AM (IST)

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)










