» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் பரிதாப சாவு
வெள்ளி 25, ஏப்ரல் 2025 8:16:33 PM (IST)
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி தாளமுத்து நகர் துரைசிங் நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் விமல் குமார் (36), பெயிண்டர். இவர் இன்று மாலை 5 மணி அளவில் தூத்துக்குடி மீனாட்சிபுரம் 5வது தெருவில் வடிவேல் ராஜா என்பவரது வீட்டில் முன் பகுதியில் கயிறு கட்டி தொங்கிய படி பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது வீட்டு முன் இருந்த உயர் அழுத்த மின் வயரில் அவரது உடல் உரசியதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து மத்திய பாகம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)

தூத்துக்குடியில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 10 மாணவிகள், டிரைவர் காயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:17:22 AM (IST)

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)










