» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விரைவுப் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதன் 16, ஏப்ரல் 2025 7:54:01 AM (IST)

பேருந்துகளின் பராமரிப்பை மேம்படுத்த வலியுறுத்தி தூத்துக்குடியில் விரைவுப் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொழில்நுட்ப ஊழியர்களை நியமிக்க வேண்டும். பேருந்துகளின் பராமரிப்பை மேம்படுத்த வேண்டும். கடுமையாக நடந்துகொள்ளும் நிர்வாக இயக்குநரைக் கண்டிப்பதுடன் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடியில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில், விரைவுப் போக்குவரத்துப் பணிமனை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

பணிமனைத் தலைவர் தர்மராஜ் தலைமை வகித்தார். சிஐடியூ மாநிலச் செயலர் பிச்சைமணி ஆர்ப்பாட்டத்தைத் தொடக்கிவைத்தார். சிஐடியூ ரயில்வே ஊழியர் சங்க நிர்வாகி டென்சிங், சிஐடியூ மாவட்டத் தலைவர் பேச்சிமுத்து உள்ளிட்டோர் பேசினர். முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், ஓய்வுபெற்றோர் அமைப்பு நிர்வாகிகள் பூபதி, கதிரேசன் நல்லபெருமாள், சிஐடியூ நிர்வாகிகள் ஜோசப், பீட்டர் அருள்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory