» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஜல்லிக்கட்டு காளை திருட்டு: போலீஸ் விசாரணை
புதன் 16, ஏப்ரல் 2025 7:49:38 AM (IST)
கோவில்பட்டி அருகே ஜல்லிக்கட்டுக் காளையைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த முடுக்கலான்குளம் கீழத் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் பொன்மாடசாமி (52). விவசாயியான இவர், கொப்பம்பட்டி-முடுக்கலான்குளம் சாலையில் உள்ள தனது தோட்டத்தில் ஆடு, பசுக்கள், ஜல்லிக்கட்டுக் காளை ஆகியவற்றை வளர்த்து வருகிறாராம்.
இவர் நேற்று முன்தினம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் திருவிழாவுக்குச் சென்றுவிட்டு வந்து பார்த்தபோது, ஜல்லிக்கட்டுக் காளையைக் காணவில்லையாம். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், கொப்பம்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து, மாட்டைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை: ரூ.2.65 லட்சம் பறிமுதல்!
வியாழன் 4, ஜூன் 2026 8:46:08 PM (IST)

டிசிடபிள்யூ நிறுவனத்தின் சார்பில் விவசாயிகள் சங்கத்திற்கு புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு விழா!
வியாழன் 4, ஜூன் 2026 8:30:19 PM (IST)

ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி : பயனாளிகளுக்கு உடனடி பட்டா வழங்கல்
வியாழன் 4, ஜூன் 2026 8:16:11 PM (IST)

திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர், உதவி ஆணையர் அதிரடி இடமாற்றம்: அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு!
வியாழன் 4, ஜூன் 2026 7:41:34 PM (IST)

ஏரல் ஜமாபந்தியில் 3 நாட்களில் 189 மனுக்கள் : 11 பேருக்கு பட்டாக்களை வழங்கினார் ஆட்சியர்!
வியாழன் 4, ஜூன் 2026 5:12:39 PM (IST)

கழிவுமீன் ஆலைகளை மூடக்கோரி 751-வது நாள் போராட்டம் : புதிய அரசு மீது மக்கள் நம்பிக்கை!
வியாழன் 4, ஜூன் 2026 4:54:32 PM (IST)










